தமிழ்மணத்தில் மென்நூல் (PDF) வசதி

April 4, 2008 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட இடுகைகளை மென்நூலாக (PDF) பெறும் வசதி ப்ளாகரின் சமீபத்திய மேம்பாடுகளுக்கு பிறகு வேலை செய்ய வில்லை. ப்ளாகர் தமிழ் குறியீட்டு முறை காரணமாக இருந்த இந்தப் பிரச்சனைகள் இப்பொழுது சரி செய்யப்பட்டு விட்டன.

ப்ளாகர் தமிழ் குறியீட்டில் இருந்த சில பிரச்சனைகளை சரி செய்ய ஆலோசனைகள் வழங்கிய நண்பர் சுரதாவிற்கு எங்களது நன்றி…

பதிவர்கள் தங்கள் இடுகைகளை மென்நூலாக பெற தமிழ்மணத்தின் பதிவுப்பட்டையை (Toolbar) தங்கள் பதிவுகளில் இணைத்தால் போதுமானது. இதன் மூலம் ப்ளாகர், வேர்ட்பிரஸ் மென்பொருள் பயன்படுத்தும் பதிவர்கள் தங்கள் இடுகைகளை மென்நூலாக பெற முடியும். வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களுக்கு வேறு வசதி செய்யப்படும்.

தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்படும் செய்தியோடைகளில் இருந்து இடுகைகள் திரட்டப்படும் என்பதால் செய்தியோடைகளில் முழு இடுகையும் இருக்குமாறு அமைக்க வேண்டும் (Blog Posts Feed – Full Feed).

அன்புடன்,
தமிழ் சசி
தமிழ்மணம்

Comments

14 Responses to “தமிழ்மணத்தில் மென்நூல் (PDF) வசதி”

 1. கைப்புள்ள on April 4th, 2008 9:04 pm

  நட்சத்திர பதிவர்களின் பதிவுகளை மின்நூலாக பெறும் வசதி இவ்வறிவிப்பிற்குப் பின்னும் வேலை செய்யவில்லை. குறை களைய வேண்டுகிறேன். நன்றி.

 2. தமிழ் சசி / Tamil SASI on April 4th, 2008 9:15 pm

  பதிவுகளை மின்நூலாக பெற தமிழ்மணம் பதிவுப்பட்டை அவசியம். நீங்கள் எந்தப் பதிவை குறிப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை.

  ஆனால் உங்களது பதிவை சோதித்த பொழுது சரியாகவே வேலை செய்கிறது.

  உதாரணமாக இந்த இடுகையை முயற்சி செய்து பாருங்கள்

  http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_16.html

 3. கைப்புள்ள on April 4th, 2008 9:21 pm

  //உதாரணமாக இந்த இடுகையை முயற்சி செய்து பாருங்கள்//

  மிக்க நன்றி

  //நீங்கள் எந்தப் பதிவை குறிப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை//

  http://thamizmanam.com/star_post.php – இந்த உரலில் கடந்த வார நட்சத்திரங்களின் பட்டியல் உள்ளதல்லவா? அங்கு முந்தைய நட்சத்திர பதிவர்களின் பெயர்களுக்கு எதிரே மின்நூலாகப் பெறும் வசதி உள்ளது. இதுவும் முன்னம் வேலை செய்துக் கொண்டிருந்தது. இப்போது செய்யவில்லை. இதை தான் குறிப்பிடுகிறேன். நன்றி.

 4. யெஸ்.பாலபாரதி on April 4th, 2008 10:26 pm

  வாழ்த்துக்கள் சசி… நீண்டநாள் கோரிக்கையை சரி செய்து கொடுத்து இருக்கிறீர்கள்.

  கைபுள்ள.. சொன்ன மாதிரி நம்ம நச்சத்திரங்களின் இடுகைகளை முன்பு மொத்தமாக மின்னூலாக்க முடிந்தது. அந்த வேலை இன்னும் மிச்சமிருப்பதாகவே நினைக்கிறேன்.

  http://www.thamizmanam.com/inc/star_post_list.php?date=2008-02-18&type=ebook

  இந்த சுட்டிக்கான மின்னூல்.. கூட தயாராகாமல்… பக்கம் பல் இளிக்கிறது.

 5. SP.VR.Subbiah on April 4th, 2008 11:12 pm

  தகவலுக்கு நன்றி!

 6. தமிழ் சசி / Tamil SASI on April 5th, 2008 2:11 am

  கைப்புள்ள, பாலபாரதி,

  நன்றி…

  இந்தப் பிரச்சனையும் சரி செய்யப்பட்டு விட்டது.

  http://thamizmanam.com/inc/star_post_list.php?date=2008-02-25&type=ebook

  மின்நூல் வசதி பெற செய்தியோடை – Blog Posts Full என்ற setting இருக்க வேண்டும். இவ்வாறாக தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகளை மட்டுமே மின்நூலாக்க முடியும்.

  இராம.கி அவர்களின் வலைப்பதிவு செய்தியோடையில் சில பிரச்சனைகள் உள்ளன என நினைக்கிறேன். அதனால் நீங்கள் கொடுத்த இந்த http://www.thamizmanam.com/inc/star_post_list.php?date=2008-02-18&type=ebook
  சுட்டியில் உள்ள எந்த இடுகையையும் மின்நூலாக்க முடியவில்லை

 7. வால்பையன் on April 6th, 2008 12:41 am

  எனது இடுக்கைகளை மென்நூலாக எடுக்க எனக்கு ஆசை.
  உங்களுடைய வசதி மேன்படுத்தும் பட்டையை என்னுடைய ப்ளாகரில் ஏற்ற முடியவில்லை . உதவி செய்யவும்

  வால்பையன்

 8. பாரி.அரசு on April 6th, 2008 9:45 pm

  வாழ்த்துக்கள்!

  ஒகார, ஓகார உயிர் மெய்கள் மின்நூல் ஆக்கும்போது பிழையாக வருகின்றன்.

  எ.கா:
  கோரிக்கை – கேதூஈதரிக்கை
  தொழிலாளர் – தெதூஈதலாளர்

  என்றும் வருகிறது.

  நன்றி

 9. தீபக் வாசுதேவன் on April 7th, 2008 10:40 pm

  WordPress.com weblog தளத்திலுள்ள பதிவுகளுக்கு எவ்வாறு இந்த வசதியைப்பயன்படுத்திக்கொள்வது என்று ஏதேனும் உதவிப்பக்கம் உள்ளதா?

 10. enRenRum anbudan BALA on April 29th, 2008 5:23 am

  சசி,
  எனது தமிழ்மண நட்சத்திர வாரப் பதிவுகளின் பட்டியலே காணப்படவில்லையே, எப்படி மென் நூலாக்குவது ? சுட்டி கீழே:

  http://thamizmanam.com/inc/star_post_list.php?date=2007-12-03&type=ebook

  நன்றி.

  எ.அ.பாலா

 11. ravishankar on May 5th, 2008 11:19 am

  உமர்தம்பி இறந்து விட்ட நிலையில், அவரது மின்மடல் முகவரிக்கு மென்னூலில் இருந்து தொடுப்பு தருவது பொருத்தமாகத் தோன்றவில்லை. அவரது தளத்துக்கு (அல்லது விக்கிப்பீடியா கட்டுரைக்கு) தொடுப்பு தரலாம்.

 12. ravishankar on July 13th, 2008 3:59 pm

  இந்த வசதி blogdesam தளத்திலும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதா? ஆங்கிலத் தளங்களுக்கு வலைப்பதிவு இடுகைகளை மென்நூலாக மாற்றும் வசதி தேடியதில் ஒரு கருவியும் கிட்டவில்லை. இந்திய ஆங்கில வலைப்பதிவுகள் மட்டும் அல்லாமல் எல்லா தளங்களும் இதைப் பயன்படுத்தும் வகையில் தனிக் கருவியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். நன்றி.

 13. Expatguru on July 16th, 2008 3:40 am

  அது மட்டுமல்ல ரவி. Blogdesam ல் கொடுக்கப்பட்டுள்ள link ஐ சொடுக்கி அதில் உள்ள instructions படி செய்தேன். கீழ்க்கண்ட error message வருகின்றது (ஆங்கிலம் உபயோகிப்பதற்கு மன்னிக்கவும், இவ‌ற்றின் த‌மிழ் வார்த்தைக‌ள் தெரிய‌வில்லை):

  “Your template could not be parsed as it is not well-formed. Please make sure that all XML elements are closed properly.
  XML error message: The value of attribute “src” associated with an element type “null” must not contain the ‘<‘ character.”

 14. […] தமிழ்மணத்தின் PDF சேவை […]

Leave a Reply