தமிழ்மணத்தில் பதிவர்களின் புகைப்படங்களை இணைக்க/மாற்றும் வசதி

March 24, 2008 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணத்தில் தற்பொழுது பதிவர்களின் புகைப்படங்கள் அவர்களின் இடுகைக்கு அருகே தெரியும் வசதி உள்ளது. சமீப காலங்களில் ப்ளாகரில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு இந்த வசதி சரியாக வேலை செய்யாததால் பதிவர்கள் தங்கள் புகைப்படங்களை மாற்றி கொள்ள முடியாத சூழல் இருந்தது. இந்தப் பிரச்சனைக்கு ப்ளாகரில் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை கையாளுவதில் இருக்கும் சில பிரச்சனைகள், தமிழ்மணத்தின் வழங்கி மாற்றத்தால் எழுந்த பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்கள். ப்ளாகரில் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை வேறு தளங்களில் தரவேற்றுவதில் சில பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனை தமிழ்மணம் என்றில்லாமல் imageshack.us போன்ற தளங்களிலும் காணப்படுகிறது. இந்த தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்ய முயல்வோம். என்றாலும் இடைக்கால ஏற்படாக தமிழ்மணம் இந்த தீர்வினை வழங்குகிறது.

பதிவர்கள் தங்களது தமிழ்மணத்தின் கருவிப்பட்டையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலமாக தங்கள் புகைப்படங்களை தமிழ்மணத்தில் மாற்றிக் கொள்ள முடியும். மேலே கூறியுள்ளது போல ப்ளாகரில் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை தமிழ்மணத்தில் இணைக்க முடியாது. ஆனால் http://www.imageshack.us/ போன்ற தளங்களில் இருக்கும் புகைப்படங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக உங்களது ப்ளாகர் ப்ரோபைலில் உள்ள புகைப்படங்களை (உதாரணமாக – இந்தப் படம்) http://www.imageshack.us/ போன்ற தளங்களில் தரவேற்றி விட்டு (Avatar – 100 x 75) அதன் சுட்டியை உங்கள் தமிழ்மணம் கருவிப்பட்டையில் இணைக்க வேண்டும் (http://img212.imageshack.us/img212/7906/thamizhsasixs1.jpg).

புகைப்படங்களை மாற்றும் செய்முறை

கீழ்க்கண்டவாறு உங்கள் புகைப்படங்களை மாற்றலாம். இந்தப் பிரச்சனையை எளிமையாக தீர்க்கவும், தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை சுலபமாக உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளவும் “தமிழ்மணம் பதிவுப்பட்டை விட்கட் (Widget)” ஒன்றை உருவாக்க திட்டம் உள்ளது. இந்த செய்முறை ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே.

தமிழ்மணத்தின் பதிவுப்பட்டையின் இரண்டாம் பகுதிக்கு செல்லுங்கள் – thamizmanam.com toolbar code Part 2

script expr:src=’ “http://services.thamizmanam.com/toolbar.php?date=” + data:post.timestamp + “&posturl=” + data:post.url + “&cmt=” + data:post.numComments + “&blogurl=” + data:blog.homepageUrl + “&photo=” + data:photo.url’ language=’javascript’ type=’text/javascript’

அதில் “&photo=” + data:photo.url என்ற பகுதியில் தான் மாற்றம் செய்ய வேண்டும். + data:photo.url என்ற variable value ப்ளாகரில் ப்ரோபைல் தவிர வேறு பகுதிகளில் வருவதில்லை என்பதால் + data:photo.url என்பதை நீக்கி விட்டு உங்கள் புகைப்படத்தை கீழ்க்கண்டவாறு இணைக்க வேண்டும்

&photo=http://img212.imageshack.us/img212/7906/thamizhsasixs1.jpg” என்று மாற்றம் செய்ய வேண்டும்.

மாற்றப்பட்ட உங்கள் கருவிப்பட்டை நிரலி இவ்வாறு தெரியும்.

இந்த மாற்றம் செய்யப்பட்ட பிறகு புதிய இடுகை தமிழ்மணத்திற்கு சமர்பிக்கப்படும் பொழுது, தமிழ்மணம் உங்கள் புகைப்படத்தையும் திரட்டிக் கொள்ளும்.

அன்புடன்,
தமிழ் சசி

தமிழ்மணம் - தமிழ் மீடியா இண்டர்நேஷனல்

Comments

17 Responses to “தமிழ்மணத்தில் பதிவர்களின் புகைப்படங்களை இணைக்க/மாற்றும் வசதி”

 1. SP.VR.Subbiah on March 24th, 2008 9:04 pm

  நல்ல முயற்சி!
  தொடருட்டும்
  உங்கள் வளர்ச்சி!

 2. Mohandoss Ilangovan on March 25th, 2008 10:23 am

  சசி,

  இந்தப் பதிவு பார்த்ததும் என் பூனையாக இல்லாமல் போன சோகங்கள் பதிவில் நீங்கள் சொன்னது போல் மாற்றம் செய்து வெளியிட்டிருந்தேன். ஆனால் புகைப்படம் மாற்றப்படவில்லை.

  any updates?

 3. Mohandoss Ilangovan on March 25th, 2008 10:26 am

  புகைப்படத்திற்கு சைஸ் லிமிட்டேஷன் உண்டோ? என்னுடைய படம் கொஞ்சம் பெரிது. நான் நினைத்தேன் ஆட்டோ க்ராப் போட்டு எடுத்துக் கொள்வீர்கள் என்று. அதுதான் பிரச்சனையா?

  உரல் இணைத்திருக்கிறேன்.
  http://baavaa.blogspot.com/2008/03/blog-post_25.html

 4. தமிழ் சசி / Tamil SASI on March 25th, 2008 8:07 pm

  மோகன்தாஸ்,

  உங்கள் புகைப்படம் தமிழ்மணத்தில் சரியாகவே தரவேற்றப்பட்டிருக்கிறது.

  this process is scheduled by means of cron, so there will be some delay from the moment you submit, to the time it gets into front page

 5. ravishankar on March 26th, 2008 7:41 am

  இடுகைகள், மின்மடல்களை தங்கள் பெயர்களிலேயே எழுதுவதை வரவேற்கிறேன்.

  **
  கருவிப்பட்டை இணைக்காதோரும் படத்தைப் பதிவேற்ற ஒரு வழி செய்யக் கூடாதா? இதற்காக நேற்று கருவிப்பட்டை இணைத்து அனுப்பப்பார்த்தேன். ஆனால், ஓடையில் பிழை என்று வந்து ஏற்க மறுக்கவே, அப்படியே விட்டுவிட்டேன்.

 6. தமிழ் சசி / Tamil SASI on March 26th, 2008 10:08 pm

  ரவிசங்கர்,

  உங்களுடைய எந்தப் பதிவை குறிப்பிடுகிறீர்கள் என கூற முடியுமா ?

  We are facing some issues in our server and database which could have caused the pinging issue.

 7. ravishankar on March 27th, 2008 1:06 am

  மீண்டும் முயன்று என்னுடைய மூன்று பதிவுகளில் profile படங்களை மாற்றிக் கொள்ள இயன்றது. நன்றி.

 8. கௌபாய்மது on March 29th, 2008 11:14 am

  படம் எந்த கோப்புவடிவத்தில் இருக்கவேண்டும். jpg, gif of png? எதுவானாலும் சரியா?

  நான் gifஇல் முயற்சித்தேன். ஏதோ பிழை வருகிறது. திரும்பவும் முயற்சிக்கிறேன். மேலதிக பிழைவருமெனில் தொடர்பு கொள்கிறேன்

 9. தமிழ் சசி / Tamil SASI on March 29th, 2008 12:05 pm

  gif, jpg, png இவை மூன்றுமே ஏற்றுக்கொள்ளப்படும். ப்ளாகரில் உங்கள் புகைப்படம் உள்ளதா ?. ப்ளாகரில் சில பிரச்சனைகள் உள்ளன

 10. ravishankar on April 10th, 2008 6:28 am

  நீங்கள் ஏன் gravatar பயன்படுத்தக்கூடாது? எல்லா பதிவர்களின் மின்மடல் விவரங்களும் உங்களிடம் உள்ளதால், அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பதன் மூலம், இதைச் செயற்படுத்துவது இலகுவாக இருக்குமே? wordpress.com பதிவுகள் பதிவர்களின் புகைப்படங்களையும் காட்டலாம். பதிவர்களும் ஒவ்வொரு பதிவாக சென்று படத்தை மாற்றத் தேவை இருக்காது.

 11. தமிழ் சசி / Tamil SASI on April 10th, 2008 5:59 pm

  ரவிசங்கர்,

  நன்றி…

  தமிழ்மணத்தில் gravatar மூலம் புகைப்படங்களை திரட்டும் நுட்பம் தற்பொழுது செய்யப்பட்டுள்ளது

 12. கௌபாய்மது on April 10th, 2008 6:42 pm

  ஆமாம், jpg, png மற்றும் gif மூன்றுமே வேலை செய்கின்றன். நான்தான் ஏதோ தவறு விட்டுவிட்டேன்போல்.

  நன்றி

 13. shakthi on April 11th, 2008 12:15 am

  எனது வலை பதிவை உங்கள் இணைய தளத்தில் இணைக்க பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் , RSS. atom கேட்கிறது
  இவைகளை நான் சந்தா செலுத்த வில்லை. எப்படி என் வலைய தளத்தை இணைப்பது. என் வலைய முகவரி http://www.lightink.wordpress.com

 14. krp on April 11th, 2008 12:56 pm

  எனது வலை பதிவை உங்கள் இணைய தளத்தில் இணைக்க பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் , RSS. atom கேட்கிறது

  எப்படி என் வலைய தளத்தை இணைப்பது. என் வலைய முகவரி http://www.visitmiletus.blogspot.com

 15. தமிழ்மணம் on April 11th, 2008 8:09 pm

  http://www.lightink.wordpress.com

  ஒன்றும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. மறுபடியும் முயற்சித்து பாருங்கள். முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்

  *********

  http://www.visitmiletus.blogspot.com

  krp,

  நீங்கள் குறைந்தது மூன்று இடுகைகள் எழுத வேண்டும்.

 16. நான் கடவுள் on April 12th, 2008 10:41 am

  அய்யா!
  “நான் கடவுள்” என்கிற எனது வலைப்பதிவை தமிழ்மனம் திரட்டியில் இனைத்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. இது சம்பந்தமாக எனக்கு மெயிலும் வந்திருந்தது. முதலில் காத்திருப்போருக்கான பட்டியலில் எனது பெயர் இடம் பெற்று பிறகு மறைந்தும்விட்டது. புதிதாக ஒரு பதிவை எழுதிய பின், அதைத் தமிழ்மனம் திரட்டியில் இனைக்க முயற்சித்தால் முடியவில்லை. ஏற்கெனவே url ‍ல் உள்ள பட்டியல் என்றே தொடர்ந்து காட்டுகிறது. தயவு செய்து உதவ முடியுமா?

 17. […] இது தவிர தமிழ்மணம் கருவிப்பட்டை வாயி… […]

Leave a Reply