தமிழ்மணத்தில் வேர்ட்பிரஸ்.காம் பின்னூட்டங்கள்

March 22, 2008 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணத்தின் “அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியில் தற்பொழுது வேர்ட்பிரஸ்.காம் (WordPress.com) பின்னூட்டங்களும் திரட்டப்படுகின்றன. வேர்ட்பிரஸ.காம் பின்னூட்ட ஓடை மூலமாக இந்தப் பின்னூட்ட நிலவரம் 20 நிமிடத்திற்கு ஒரு முறை திரட்டப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழ்மணத்தின் சோதனை ஓட்டத்தில் இந்த வசதி உள்ளதால் சில பிரச்சனைகள் இருக்கலாம். அவ்வாறான பிரச்சனைகளை பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்தால் அதனை சரி செய்ய முயல்வோம்.

அறியப்பட்ட பிரச்சனைகள்

* பின்னூட்ட ஓடையில் (Comment Feed) இருக்கும் பின்னூட்டங்களைப் பொறுத்தே பின்னூட்ட எண்ணிக்கை தமிழ்மணத்தில் தெரியும். எனவே இது வரை எழுதப்பட்ட இடுகைகளின் பின்னூட்ட எண்ணிக்கை தமிழ்மணத்தில் சரியாக இருக்காது. உதாரணமாக ஒரு இடுகை 20 பின்னூட்டங்களை பெற்றிருக்கலாம். ஆனால் பின்னூட்ட ஓடையில் அந்த இடுகையின் 4 பின்னூட்டங்கள் மட்டுமே இருந்தால் தமிழ்மணத்தில் பின்னூட்ட எண்ணிக்கை 4 என்றே தெரியும்.

* அது போலவே சோதனை ஓட்டத்தின் பொழுது பல முறை சில பதிவுகள் சோதனை செய்யப்பட்டன. எனவே அத்தகைய இடுகைகளின் பின்னூட்ட எண்ணிக்கையும் சரியாக இருக்காது. உதாரணமாக ஒரு இடுகை 1 பின்னூட்டத்தை மட்டுமே பெற்றிருக்கலாம். ஆனால் தமிழ்மணத்தில் 4 என்று தெரியலாம்.

இந்தப் பிரச்சனைகள் கடந்த காலங்களில் எழுதப்பட்ட இடுகைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இனி மேல் எழுதப்படும் இடுகைகள், அவற்றின் பின்னூட்ட எண்ணிக்கை தமிழ்மணத்தில் சரியாக தெரியும்.

தமிழ்மணத்தின் இந்தப் புதிய வசதி வேர்ட்பிரஸ் பதிவர்களுக்கு அதிக கவனத்தை பெற்று தரும் என நம்புகிறோம்.

அன்புடன்,
தமிழ் சசி
தொழில்நுட்ப குழு
தமிழ்மணம் – தமிழ் மீடியா இண்டர்நேஷனல்

Comments

28 Responses to “தமிழ்மணத்தில் வேர்ட்பிரஸ்.காம் பின்னூட்டங்கள்”

 1. vassan on March 22nd, 2008 12:51 pm

  wordpress.com என்றிருக்க வேண்டும்.

  ஏனெனில் (உ)வேர்ட்பிரஸ் வலைப்பதிவு செயலியை நேரடியாக பயன்படுத்தி, தனித்தளம் வைத்திருப்பவர்களின் தளங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்பட் இடைஞ்சல்கள் இல்லை.

 2. தமிழ் சசி / Tamil SASI on March 22nd, 2008 2:08 pm

  வாசன்,

  நன்றி

  தமிழ்மணம் பதிவுப்பட்டையை இணைக்க முடியாத வேர்ட்பிரஸ்.காம் பதிவுகளுக்கு தான் இந்தப் பிரச்சனை இருந்தது.

  வேர்ட்பிரஸ் செயலிகளில் இயங்கும் தனி தளங்களில் தமிழ்மணம் பதிவுப்பட்டையை இணைக்க முடியும் என்பதால் எப்பொழுதும் பிரச்சனை இருந்தது இல்லை

 3. thamizachi on March 22nd, 2008 2:29 pm

  வணக்கம் தமிழ் சசி

  என்னுடைய “தமிழச்சியின் வலைத்தளத்தில்” இருந்து வெளியிடப்படும் பின்னூட்டங்கள் இன்று தமிழ்மணத்தில்
  மறு இடுகையில் வரவில்லை? என்ன காரணம்?

 4. தமிழ் சசி / Tamil SASI on March 22nd, 2008 2:39 pm

  தமிழச்சி,

  உங்கள் பதிவில் தமிழ்மணம் பதிவுப்பட்டை இல்லை என்று நினைக்கிறேன். தமிழ்மணத்தின் பதிவுப்பட்டையை இணைத்தால் மறுமொழிகள் தெரியும்

 5. thamizachi on March 22nd, 2008 4:05 pm

  தகவலுக்கு நன்றி தமிழ் சசி.

 6. Newscap on March 23rd, 2008 7:09 am

  http://newscap.wordpress.com/atom

  மேலேயுள்ளது எனது வலைப்பூவின் ஆட்டம் முகவரி.

  இந்த பதிவை போன மாதம் தமிழ்மணத்தில் இணைத்தேன். ஆயினும் இந்த பதிவு தமிழ்மணத்தில் தெரிவதில்லை. ஒருவேளை முதல் முறை பதிவு செய்த பொழுது RSS feed கொடுத்திருந்தேன். அது காரணமா தெரியவில்லை.

  Newscap

 7. வைகை on March 23rd, 2008 9:55 am

  தமிழ் சசி,

  நீங்கள் வேர்ட்பிரஸ் பற்றிச் சொல்கிறீர்கள்.நான் புளொக்கரில் எனது பதிவுகளை இட்டு, கருவிப்பட்டையையும் இணைத்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறேன். இன்னமும் தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை. மின்னஞ்சலும் அனுப்பிப் பார்த்தாயிற்று. எல்லோருக்கும் வேலைப்பளுதான். இருப்பினும் இத்தனை நாட்களாகியும் கவனிக்காதிருப்பது உறுத்தலாக இருக்கிறது.குறைந்தபட்சம் அந்த வலைப்பூவில் என்ன தவறு என்றாவது சொல்லலாம். அனுப்பிய மடல்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கின்றன. தயவுசெய்து எனது வலைப்பூவை தமிழ்மணத்துடன் இணைத்திட உதவவும். நன்றி.

 8. வைகை on March 24th, 2008 11:32 am

  நன்றி தமிழ் சசி. எனது வலைப்பக்கம் கவனத்திற்கெடுக்கப்பட்டிருக்கிறது. கருவிப் பட்டை தெரிகிறது. தமிழ்மணத்திற்கு ஒரு பதிவையே அனுப்ப முடிந்தது. ஏனைய பதிவுகளை அனுப்ப முயற்சிக்க, ‘தங்கள் செய்தியோடையில் தவறிருக்கிறது’ என்று ஒரு செய்தி வருகிறது. சிலவேளை நான் அவசரப்பட்டு அனுப்ப முயற்சித்தேனோ(ஆர்வக்கோளாறுதான்)என்றெண்ணுகிறேன். மடலில் குறிப்பிட்டிருக்கிறபடி ஒரு நாள் கழித்து என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். பொறுமை காத்து அதன் பிறகும் சரியாகாவிட்டால் உங்களைத் தொந்தரவு செய்யத்தான் வேண்டும். வேறு வழி:)

 9. தமிழ் சசி / Tamil SASI on March 24th, 2008 9:48 pm

  வைகை,

  உங்கள் வலைப்பதிவு தமிழ்மணம் சேர்க்கை பட்டியலில் ஆரம்பத்தில் இல்லை.

  இந்த சுட்டி மூலமாக உங்கள் வலைப்பதிவை நீங்கள் இணைக்கவில்லை என்று நினைக்கிறேன்
  http://thamizmanam.com/user_blog_submission.php

  தற்பொழுது
  உங்களுடைய பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. இனி உங்கள் பதிவு தமிழ்மணத்தில் தெரிவதில் பிரச்சனை இருக்காது

 10. தமிழ் சசி / Tamil SASI on March 24th, 2008 10:15 pm

  Newscap, your feed looks ok.
  புதிய இடுகை எழுதி சமர்ப்பித்தால் சரியாக வேலை செய்யும்

 11. Athisha on March 25th, 2008 2:08 am

  எனது பதிவுகள் ”அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியில் வருவதில்லை , நான் மறுமொழி மட்டுருத்தல் செய்துள்ளேன் . எனக்கு உதவ முடியுமா?

 12. ravishankar on March 27th, 2008 1:09 am

  தொடர்ந்து, நுட்ப மேம்பாடுகள் / வழுக்கள் களைவது நன்று. முன்பு நான் முயன்றபோது http://thamizmanam.com/user_blog_submission.php பக்கத்தில் இருந்து வேர்ட்பிரெஸ் பதிவுகளைச் சேர்க்க முடியாமல் இருந்தது. இப்போது அந்தப் பிரச்சினை தீர்ந்ததா என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

 13. தமிழ் சசி / Tamil SASI on March 29th, 2008 9:43 am

  ரவிசங்கர்,

  பதிவுகளை திரட்டுவதில் இருந்த
  அனைத்துப் பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்டன. சில வேர்ட்பிரஸ் பதிவுகளை சோதனை செய்தேன். சரியாகவே வேலை செய்கிறது. நன்றி…

 14. தமிழ் சசி / Tamil SASI on March 29th, 2008 9:48 am

  Athisha,

  உங்கள் பதிவில் தமிழ்மணம் பதிவுப்பட்டையை (toolbar) இணைத்தால் மறுமொழி திரட்டப்படும்.

  பின்னூட்டங்களை திரட்டுவதற்கு மட்டுறுத்தல் அவசியம் இல்லை. ஆனால் பின்னூட்டங்களை மட்டுறுத்த தமிழ்மணம் ஊக்குவிக்கிறது.

 15. மயூரேசன் on April 6th, 2008 9:55 pm

  ஆகா.. அருமை!!!

 16. ravishankar on April 7th, 2008 6:18 am

  http://mayuonline.com/blog/thamizmanam-tool-bar/ பதிவில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு இருக்கிறதா? தனித்தள வேர்ட்பிரெஸ் பதிவுகளில் தமிழில் அர்த்தமுள்ள முகவரிகள் வைப்பது நல்ல வசதி. இத்தகைய பதிவுகளிலும் தமிழ்மணம் கருவிப்பட்டை வேலை செய்தால் நன்றாக இருக்கும். நன்றி.

 17. தமிழ் சசி / Tamil SASI on April 7th, 2008 10:40 pm

  மயூரேசன், ரவிசங்கர்,

  இது தமிழ்மணத்தின் தொழில்நுட்ப பிரச்சனை மட்டும் அல்ல. தமிழ் எழுத்துக்களை தமிழ்மணம் சரியாகவே உள்வாங்கி கொள்கிறது.

  தமிழ்மணம் என்றில்லாமல் தமிழ் மூலமாக வரும் சுட்டிகளை கையாளுவதில் உள்ள பொதுவான பிரச்சனையாகவே இதனை கருதுகிறேன்.

  விரைவில் சரி செய்ய முயல்கிறோம்

  இந்தப் பிரச்சனையை அறியத்தந்தமைக்கு நன்றி..

 18. Newscap on April 8th, 2008 3:20 am

  //Newscap, your feed looks ok.
  புதிய இடுகை எழுதி சமர்ப்பித்தால் சரியாக வேலை செய்யும் //

  மிக்க நன்றி,

  இன்னும் சோதனை செய்யவில்லை. தங்களது சிறப்பான சேவைகளுக்கு வாழ்த்துக்கள்,

  செய்திரசம்

 19. தமிழ் சசி / Tamil SASI on April 8th, 2008 11:21 pm

  மயூரேசன், ரவிசங்கர்,

  வேர்ட்பிரஸ் சார்ந்த பிரச்சனை (
  தமிழில் அர்த்தமுள்ள முகவரிகள்)
  சரி செய்யப்பட்டு விட்டது

  வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும்…

  நன்றி…

 20. shakthi on April 11th, 2008 12:30 am

  without rss/atom how i can add my site in u r tamilmanam
  i do not know about rss/atom my web sit is
  http://www.lightink.wordpress.com
  pls kindly help me

 21. Mathangi on April 13th, 2008 1:26 am

  வணக்கம்.

  என்னுடை வலைப்பதிவு-
  http://www.clickmathangi.blogspot.com
  மறுமொழி மட்டுறுத்தல் செய்திருக்கிறேன். என் வலைப்பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டையையும் இணைத்திருக்கிறேன்.

  என் பதிவிற்கு உடனடியாக வரும் பின்னூட்டங்கள்
  அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளின் கீழ் வருவதில்லையே. அப்படி வர நான் என்ன செய்யவேண்டும்
  அன்புடன்
  மாதங்கி

 22. தமிழ்மணம் on April 13th, 2008 8:50 am

  சக்தி,

  http://www.lightink.wordpress.com
  மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள். எதுவும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை

  மாதங்கி,

  தமிழ்மணம் கருவிப்பட்டையை நீங்கள் சரியாக இணைக்க வில்லை. உங்கள் பதிவில் கருவிப்படை தெரியவில்லை…

 23. மாதங்கி on April 13th, 2008 8:39 pm

  நன்றி,
  உடனே சரிபார்க்கிறேன்

 24. அருட்பெருங்கோ on April 27th, 2008 11:57 pm

  தமிழ் சசி,

  தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவிய பின்னர் தமிழ்மண கருவிப்பட்டை இணைத்துக்கொண்டேன்.

  இடுகைகளும், மறுமொழிகளும் திரட்டப்பட்டன.

  இப்பொழுது கருவிப்பட்டையை இடுகைக்கு கீழே வருமாறு மாற்றிய பின்னர் இடுகைகள் மட்டுமே திரட்டப்படுகின்றன. மறுமொழிகள் திரட்டப்படுவதில்லை.

  என்ன செய்ய வேண்டும்.

  (அப்படியே எனது ஓடையையும் feedburner க்கு மாற்றிக்கொள்ள முடியுமா? http://feeds.feedburner.com/arutperungo )

 25. தமிழ் சசி வணக்கம்,

  எனது வலைப்பக்கம் தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை, என்ன காரணமென்று தெரியவில்லை பலமுறை பலருடன் தொடர்பு கொண்டிருந்தும் எவ்விதமான முடிவும் வரவில்லை உங்களால் முடிந்தால் உதவி செய்ய முடியுமா?

  வேர்ட்பிரஸ் மூலம் தான் செயல்படுகிறது.

  http://www.satiyakadatasi.com/
  send me a mail if u can,

  உதவி செய்தால் நன்றியாக இருக்கும்

  thank u

  theo

 26. தமிழ் சசி / Tamil SASI on May 7th, 2008 8:39 pm

  theo,

  இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டது. தாமதத்திற்கு வருந்துகிறேன். நீங்கள் செய்தியோடையை feedburnerல் வைத்து இருக்கிறீர்கள். இதனால் பழைய தமிழ்மணம் உங்கள் பதிவை திரட்டுவதில் சில பிரச்சனைகள் இருந்தது. என்ன காரணம் என தெரியவில்லை.

  இப்பொழுது தமிழ்மணமத்தின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக உங்கள் பதிவை திரட்டுவதில் இனி மேல் பிரச்சனை இருக்காது.

 27. பாரிஸ் திவா on May 13th, 2008 11:56 am

  தமிழ் சசி

  நான் எனது வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். தமிழ்மணம் பதிவுபட்டையை எனது வலைப்பக்கத்தில் இணைத்துள்ளேன். ஆனால் பதிவு பக்கத்தில் பட்டையை காணவில்லை.

  எனது வலைமுகவரி http://thamiloli.com

 28. lathananth on June 30th, 2010 3:39 am

  த்மிழ் மணம் கருவிப் பட்டையை எப்படி இணைப்பது?

Leave a Reply