Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /homepages/21/d718806694/htdocs/tm_blog/wp-includes/pomo/plural-forms.php on line 210
செல்பேசிகளில் தமிழ்மணம் : தமிழ்மணம்

செல்பேசிகளில் தமிழ்மணம்

February 21, 2008 · Posted in அறிவிப்புகள் 

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இணைய நுட்பங்களின் ஓர் அங்கமாகச் செல்பேசிகள் மற்றும் நகர்கணிகள் வழியாகத் தரவுப்பரிமாற்று வசதி அமைந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவுலகில் பல வசதிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்திய தமிழ்மணம் இப்போது செல்பேசிகளிலும் தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டியினைக் காணும் வசதியினை வெளியிடுகிறது. இந்தச் செல்பேசித் திரட்டியைக் கீழ்க்காணும் முகவரியில் காணலாம்.

http://m.thamizmanam.com

இவ்வசதியானது தமிழ் ஒருங்குறி (Tamil Unicode) வசதி அமையப்பெற்ற செல்பேசிகள், நகர்கணிகள், கைக்கணிகள் முதலியனவற்றில் மட்டுமே தெரியும். காட்டாக, அண்மையில் வெளிவந்திருக்கும் நோக்கியா செல்பேசிகளில் தமிழ் ஒருங்குறி வசதி உள்ளது. வெளிநாடுகளில் கிடைக்கும் பிளாக்பெர்ரி போன்றவற்றில் தற்போது இவ்வசதி இல்லையெனினும், விரைவில் பிற நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளும் தமிழ் ஒருங்குறி வசதியோடு வடிவமைக்கப்பட்டு வருமென நம்புகிறோம்.

நோக்கியா செல்பேசியில் தமிழ்மணம்/வலைப்பதிவுகள் தோன்றும் திரைக்காட்சிகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம். தற்போது எந்தெந்தச் செல்பேசிகளில் இவ்வசதி இருக்கிறது, தமிழ்மணம் திரட்டியைப் பார்க்க முடிகிறது, நிறை குறைகள் என்ன என்பது போன்ற கருத்துக்களை பின்னூட்டங்கள் வாயிலாக பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

இவ்வசதியின் மூலம் செல்பேசிகளிலும் தமிழ்வளர்ச்சி, பரவல் முதற்கொண்ட பல இயலுமைகள் ஏற்படும் என்று நம்புகிறோம். வளரும் நுட்பச் சூழலுக்கு ஈடுகொடுத்து தமிழும் உடன் பயணிக்க தமிழ்மணத்தின் இச்சேவை சிறுவகையில் உதவலாம். இச்சேவையை, வரும் நாட்களில் மேலும் செம்மைப்படுத்த முனைவோம். அம்முயற்சிக்கு உங்கள் ஆலோசனைகள் பெரிதும் உதவும்.

தமிழ்மணம் நிர்வாகம்

Comments

22 Responses to “செல்பேசிகளில் தமிழ்மணம்”

 1. ila on February 21st, 2008 6:46 am

  அசத்துது தமிழ்மணம். இதைத்தான் அடுத்த கட்டம் என்பது. நிரூபிக்கும் தமிழ்மணத்தாருக்கு வாழ்த்துக்கள்.

 2. மணியன் on February 21st, 2008 7:38 am

  இணையத்தமிழுக்கும் தமிழ்வலைப்பதிவுகளுக்கும் இன்று ‘சிவப்பெழுத்து நாளா’கும். தாங்கள் ஆற்றும் சீரியபணிக்கு தலைவணங்கி வாழ்த்துகள் கூறுகிறேன்.

 3. siva on February 21st, 2008 9:15 am

  Hello tamilmanam

  how to we make seen your web site? see your text any place you do not give phone number or sms number ??

  please correct one then only we teste it our cell phone

  thank you

  siva
  Puduvai

 4. princenrsama on February 21st, 2008 9:58 am

  நான் இன்னும் முயற்சிக்கலை… ஆனாலும் வாழ்த்துகள் தமிழ்மணத்திற்கு

 5. Mastan on February 21st, 2008 10:15 am

  Dear sir,
  Thank you very much. I’m always visiting Tamilmanam and reading the entire subject. Really you are doing great job. After I read that we can access Tamilmanam from mobile, wowowow… wonder full news. Congrats. I’m using Windows mobile with GPRS connection. Hope it is supporting. Once again thanks for giving such a beautiful chance.
  –Mastan Oli

 6. Anonymous on February 21st, 2008 10:22 am

  Siva,

  You have to enter address m.thamizmanam.com in your web browser in a web enabled (gprs subscribed) cell phone.

  Then it has to have the Tamil Unicode support like the few latest Nokia phones with Hindi letters on the keypad.

  Only then you could enjoy(?) this.

 7. Mastan on February 21st, 2008 10:25 am

  Dear sir,
  For your kind attention, I entered http://m.thamizmanam.com thorough Internet explorer mobile version. But Tamil letters are showing as boxes, same like how the Unicode doesn’t support in normal browser. Even though I was selected default character set as “Unicode (UTF-8)”. Could you suggest me? What should I do to see your website in windows mobile? Thanks in advance
  –Mastan Oli

 8. சிறில் அலெக்ஸ் on February 21st, 2008 1:01 pm

  வாவ். வாழ்த்துக்கள்.

  என்னோட iphoneல ஒருங்குறி இன்னும் வரல. 🙁

 9. TBCD on February 22nd, 2008 5:37 am

  நான் என்னுடைய கைப் பேசியில் கூகிள் படிப்பானை பார்ப்பது வழக்கம். அதன் மூலம் வலைப்பதிவுகளையும் படிப்பேன். அதில் தமிழ் எழுத்துக்கள் தெரிவதில் இது வரை பிரச்சனை இல்லை.

  ஆனால், தமிழ் மணமத்தைத் திறந்தால் எழுத்துருச் சரியாக இல்லை. தமிழ் மணம் முன்னர் ஒரு முறை அனுப்பிய மின்னஞ்சலிலும் அதே பிரச்சனை தான். பின்னர், அதே மின்னஞ்சலை, யாகூ பீட்டாவில் பார்த்தால் தமிழாகத் தெரிந்தது.

  ஆக, ஏதோ நுட்ப வித்தியாசம் இருக்கிறது போல் இருக்கிறது. அதை எப்படி சரி செய்து இந்த வசதியயைப் பெறுவது என்று பதிவுலக சித்தர்கள் சொன்னால்..நல்லா இருக்கும். 🙂

 10. நித்யகுமாரன் on February 22nd, 2008 12:08 pm

  புதிய வாய்ப்பிற்கு நன்றி.

  என்னுடைய nokia e61i ல் வழக்கம்போல் கட்டங்களே தென்படுகின்றன. எழுத்துரு பெற என்ன செய்யலாம் என்று பதிவுலக சித்தர்கள் (நன்றி : tbcd)சொன்னால் புண்ணியமாகப்போகும்.

 11. ILA on February 22nd, 2008 4:20 pm

  As per my experience from my website and mobile experience, listed these should be considered in m.thamizmanam.com.
  1. forward url is not good option as requires more cache in phones. At the same time back option is also a tricky, coz found some phones(pearl) stuck.
  2. left aligned is better.
  3. I dont think content is required, only the heading is enough for mobile blogging(based on feedback from the users).
  4. having a logo for thamizmanam as header gives an uniqueness however occupying some bandwidth.(3291 bytes does matters when the network strength is week).
  5.TMI can try for comments by providing providing links.

  –Sorry for english–

 12. ஆசிப் மீரான் on February 23rd, 2008 2:13 am

  தமிழ் மணாத்தின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்

  N70 மற்றும் i-mate Jag ஆகிய செல்பேசிகளில் ஒருங்குறி இல்லை போலிருக்கிறது. எனவே எல்லாம் கட்டம் கட்டமாகவே தெரிகிறது

  வாழ்த்துகளுடன்
  ஆசிப் மீரான்

 13. Thamizhan on February 23rd, 2008 12:48 pm

  பாராட்டுக்கள்.
  தமிழ்,,தமிழின வளர்ச்சிக்கு உங்கள் முயற்சிகளுக்கும்,உழைப்பிற்கும்
  நன்றி.
  பதிவர்கள் தயை செய்து கட்டுப் பாட்டோடு நாகரீகத்தைக் கடைப்பிடித்து எழுத மீண்டும் வேண்டுகோளும்,அதற்கு மேலே வேண்டுமானால் கட்டுப்பாடுங் கொண்டுவரவேண்டுகிறேன்.

 14. chitthajagat.in on February 26th, 2008 12:18 am

  Dear Friends,

  you inspire all of us at chitthajagat.in (Hindi Blog aggregator). Here I would just like to share with you that, we too have mobile version of our aggregator.

  http://mobile.chitthajagat.in

  to make easy for people those who do not have Hindi enabled device, we give them romanised version at

  http://mobile.chitthajagat.com

  Chitthajagat.in

 15. Ismail Kani on March 30th, 2008 1:54 am

  சவுதி அரேபிய சந்தையில் கிடைக்கும் Nokia 95 யிலும் எழுத்துகள் எல்லாம் சதுர கட்டகட்டமாக தான் தெரிகிறது.

  இஸ்மாயில் கனி
  http://kaniraja.blogspot.com
  http://kaniraja.mofuse.mobi

 16. தஞ்சாவூரான் on March 30th, 2008 8:49 pm

  தமிழ்மணத்தின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

  என்னோட iPhone லயும் கட்டம் கட்டமாத்தான் தெரியுது. (அப்பாடி, நம்மகிட்டேயும், iPhone இருக்குன்னு ஒரு வழியா விளம்பரம் பண்ணியாச்சு 🙂 ஸ்ஸ்ஸ்ஸ்… யப்பா, என்ன பாடுபட வேண்டியிருக்கு ஒரு தம்பட்டம் அடிச்சுக்க?) 🙂

 17. Anonymous on April 17th, 2008 5:58 am

  http://www.tamilbible.info/mobile/tmb.shtml

  This website says:

  How to enable Unicode Support [in Mobiles]?

  * Go to your nearest Mobile service center of your mobile Company. For example, Nokia Service center for Nokia Mobile Series, Sony Ericsson Service center for Sony Ericsson Series etc…
  * Ask them to install “firmware” software to enable Unicode support for java applications.

  That’s all!!!!!

 18. சு. க்ருபா ஷங்கர் on April 29th, 2008 3:27 pm

  “தங்க்லீஷ்” versionஉம் இருந்தால் நல்லா இருக்கும், மேலே உள்ள அனானி சொல்லியிருப்பது மாதிரி, வெறும் தலைப்பு/எழுதியவர் பெயரோடு.

  நான் சில வருடங்களுக்கு முன், தமிழ்மணத்தின் செய்தியோடையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ஒரு தங்க்லீஷ் மொபைல் அக்ரகேட்டர்:
  http://www4.brinkster.com/shankarkrupa/blog/rsscell.asp

 19. Subash on May 2nd, 2008 3:28 am

  hello,
  its really great idea.
  but i cudnt read the letters in my nokia 6120c.
  am using html/xhtml browser, i cant view wap pages, i dono wat to do!!!!!
  pls help
  thanks in advance

 20. Abdulmalik on May 6th, 2009 11:49 pm

  i cont see tamizmanam (tamil only) at nokia N95 8gb
  to see wha i do pls help me

  abdulmalik

 21. Charles William J on May 7th, 2009 6:35 pm

  Dear Sir,
  Excited about Tamizmanam. Sony Ericsson w 830i model does not have tamil unicode.
  Charles William J
  08 05 2009

 22. Arikrishnan on May 31st, 2010 1:40 am

  Hi,

  Sony Ericsson J105i (Naite) phone is tamil unicode supported?

  Pl. help me.

  Thanks.

Leave a Reply