அண்மைய சில இடுகைகள்

January 31, 2008 · Posted in அறிவிப்புகள் 

பதிவர்களுக்கு,
கடந்த சில நாட்களாகச் சில பதிவர்கள் ஒரு பகுதி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு பலரை முகம் சுளிக்க வைக்கும் இடுகைகளைத் தமிழ்மணத்தில் இணைத்து வருவதைப் பல பதிவர்களும், வாசகர்களும் எமக்குத் தெரியபடுத்தி வருகிறார்கள். பதிவர்களின் கருத்துரிமையில் தலையிடும் நோக்கம் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு இல்லையெனினும், இப்போக்கால் பெருவாரியான பதிவர்கள், வாசகர்கள் தமிழ்மணத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு இத்தகைய, வெறும் பரபரப்பு மதிப்பிற்காக எழுதப்படும் இடுகைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது மேலும் தொடருமானால் பெருவாரியான பதிவர்கள்/வாசகர்களின் தேவைகள், ஆர்வங்கள் ஆகியவற்றைக் கருதி அத்தகைய இடுகைகள் நீக்கப்படும் அல்லது பதிவுகளைத் திரட்டுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

பதிவர்களின் புரிந்துணர்விற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.

தமிழ்மணம் நிர்வாகம்

Comments

35 Responses to “அண்மைய சில இடுகைகள்”

 1. லக்கிலுக் on January 31st, 2008 11:55 pm

  நல்ல முடிவுக்கு நன்றி!

  முடிந்தால் சூடான இடுகைகள் என்ற ஒரு பகுதியையே தூக்கிவிடவும். அப்பகுதியில் இடம் பெறுவதற்காக நடக்கும் கோமாளிக் கூத்துக்கள் காண சகிக்கவில்லை.

  புரிந்துணர்வுடன் தொடரும் தமிழ்மணத்தின் ஒத்துழைப்புக்கு நன்றி!

  அன்புடன்
  லக்கிலுக்

 2. கானல்மனிதன் on February 1st, 2008 12:04 am

  நல்ல முடிவு. வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் எங்களது குடும்பத்தினருக்குக் கூட தமிழ் ஆர்வத்தைத் தூண்ட தமிழ்மணத்தைச் சிபாரிசு செய்தோம். இப்போது இது போன்ற இடுகைகள் எங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகின்றன. இந்த முடிவை தீவிரமாக அமல்படுத்தும்படி வேண்டுகிறோம்.

 3. குசும்பன் on February 1st, 2008 12:33 am

  அருமையான முடிவு, காலதாமதம் இன்றி செய்யவும்!

  லக்கி சொன்ன சூடான இடுகை பற்றிய கருத்துக்கு 1000 ரிப்பீட்டு!

 4. Osai Chella on February 1st, 2008 1:14 am

  //முடிந்தால் சூடான இடுகைகள் என்ற ஒரு பகுதியையே தூக்கிவிடவும்.//

  நேயர் விருப்பம் தான் இன்று எஃப் எம் ரேடியோக்கள் முதல் மாதாந்தர, நாலாந்தர பத்திரிகள் வரை, டீவி (உமா உங்கள் சாய்ஸ் வரை.. இன்றைய ட்ரென்டு!

  லக்கி விளம்பரத்துறை பற்றி நன்கறிந்த நண்பர். தமிழ்மணம் என்னும் இணைய மீடியா மீது என்ன கோபமோ தெரியவெல்லை! அவர்களின் வேண்டுகோளே போதுமானது… அப்பகுதியையே தூக்குவது என்பது மூட்டைப்பூச்சிக்காக வீட்டைக்கொழுத்துவது போல என்று கூறி அமைகிறேன்.. நன்றி வணக்கம்! வாழ்க தமிழர்களின் மனம்! மானம்! தமிழ்மணம்!

 5. வளர்மதி on February 1st, 2008 1:51 am

  நன்று.

  சில நாட்களாக தமிழ் மணம் பக்கம் வரவே தயக்கமாகவும் சில நேரங்களில் அருவருப்பாகவும் இருந்தது. எட்டிப் பார்த்து ஓடிவிடும் நிலைமை.

  சரியான நேரத்தில் அவசியமான குறுக்கீடு.

  அன்புடன்

  வளர்மதி

 6. TBCD on February 1st, 2008 2:39 am

  ஓஓஓஓஓஓ

 7. உண்மைத்தமிழன் on February 1st, 2008 7:29 am

  இது மாதிரி எச்சரிக்கை விடுப்பதற்கு இங்கே எழுதுபவர்கள் பள்ளி மாணவர்களா என்ன..?

  தொடர்புடைய அனைத்துப் பதிவுகளையும் ஒரு மாதத்திற்கு திரட்டுவதில்லை என்ற முடிவைச் சொல்லியிருக்க வேண்டும். இதிலென்ன வேலையற்ற எச்சரிக்கை அறிவிப்பு வேண்டிக் கிடக்கு..?

  அடுத்த முறையாவது உடனடி நடவடிக்கை எடுத்துவிட்டு ஆக்ஷனை மட்டும் சொல்லவும்.

  ரொம்ப நாள் கழிச்சு தமிழ்மணத்தைப் பார்க்கலாம்னு உக்காந்தா..? இப்படியா..?

  கர்மம்.. கர்மம்.. கர்மம்..

 8. சஞ்சய் on February 1st, 2008 8:18 am

  நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்மணம் பக்கம் வந்தேன். ஒரே மஞ்சள் வாடை. நான் உண்மை தமிழனை வழிமொழிகிறேன்.

 9. சரவண குமார் on February 1st, 2008 9:17 am

  ஒரு வழியாக தேர் நிலைக்கு வரும் அறிகுறி தெரிகிறது.காலம் தாழ்ந்த பின்னும் 🙂

 10. டோண்டு ராகவன் on February 1st, 2008 9:21 am

  மட்டுறுத்தல் அவசியம் வேண்டும் என்ற நல்ல நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது தவறெனவே படுகிறது. அதை மறுபடியும் செயல்படுத்தவும்.

  இல்லாவிட்டால் நந்தவனத்தில் ஆண்டி போன்றவர்களின் பதிவுகள்தான் பெருகும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 11. v.m on February 1st, 2008 9:25 am

  சூப்பர்,

  கடந்த 2 வாரமாகவே, சூடு பறக்கிறது. பின்னூட்டத்தில் சொல்லியும் ஒன்னும் நடக்கல, போடுபவர் போடட்டும், அதை அந்த தலைப்புகளை பயன்படுத்தி நக்கலடித்து பதிவு போடுபவர்களாவது நிறுத்தட்டும் என கேட்டும் பயனில்லை..

  அதானாலேயே , அதை பற்றியே எழுதியவர்கள் , அதை நக்கலடித்தே பதிவு போட்டவர்கள் என இருவரையும் சேர்த்தே ஒரு சர்வே பதிவே போடுமளவுக்கு ஆகிவிட்டது:(

  .. தமிழ்மணம் நடவடிக்கைக்கு பிறகு, நான் (என் பதிவில் தவறாக எழுதவில்லை எனும் பொழுதும்) அந்த சர்வே பதிவை இப்போது நீக்கிவிட நினைக்கிறேன்.,

  தமிழ்மணம் இதனை நிறுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி.

  லக்கி அவர்களே,

  நீங்கள் இங்கே முதல் ஆளாக பேசியிருப்பதில் மகிழ்ச்சி, அவர்கள் அப்படி பதிவு போட்டார்கள் என்று நீங்களும் அதே தலைப்பு கொடுத்து, அதை பற்றியே எழுதிய் படமெல்லாம் போட்டு 3, 4 பதிவுகள் போட்டிருக்கவேண்டாம்.

 12. P.V.Sri Rangan on February 1st, 2008 9:26 am

  தமிழ்மணம் குறித்து என்னிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.எனினும், அதன் நோக்கத்தில் தவறிருப்பதாக நான் உணருகிறேன்.
  வெற்றுவேட்டுப் பதிவுகளையெல்லாம். சூடான பதிவுக்குள் முன்னிறுத்தும் குழந்தைத் தனத்தை அது செய்வது எதனால்?

  நான் டோண்டு மீது பெருமதிப்பு வைத்திருப்பவன்.

  அதற்கான காரணம் அவரது பல் மொழி ஆளுமை.

  எனினும்,அவர் எதை எழுதினும் சூடான பதிவாக்கும் குழந்தைத்தனம் ஏற்பதற்கில்லை.

  அவ்வ்வண்ணமே இப்போதைய நிலைமை உருவாகி இருக்கிறது.

  இதையாவது தடுக்கும் உணர்வு-அறிவு இருக்கிறதே!-அதைப் பாராட்டலாம்.

  எங்கள் பதிவை சூடானதாக்கத் தேவையில்லை!

  ஆனால், சமூகத்துக்கு அவசியமற்ற சினிமாத்தனமான எழுத்துக்களைச் சூடானதாக்க வேண்டாமே!

  டோண்டுவின் அநுபவம் சார்ந்த பல பதிவுகள் புதிதாய் தொழில் தொடங்கும் மாணவர்களுக்குப் பயன்பாடானது.

  ஆனால், தற்போதைய அவரது எழுத்துக்கள் எதிலும் சமூக நலன் இருப்பதாக நான் அறியவில்லை.
  தமிழ்மணம் தமது உறுப்பினர்களை-தேர்வுக்குகுழுவை மறுபரீசீலனை செய்து சிறுபிள்ளைக் குணங்களைக் களைதல் நன்று.

 13. கடுப்பு கந்தசாமி on February 1st, 2008 9:53 am

  இங்கேயும் டோண்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார். அதற்கு சிறிரெங்கன் வேறு ரெகமெண்டேசன். வெளங்கிடும்.
  🙁

 14. டோண்டு ராகவன் on February 1st, 2008 10:13 am

  ஸ்ரீரங்கன் அவர்களே,

  திடீரென என்மீது பாயும் நோக்கம் என்ன? எனது எந்தப் பதிவு/பதிவுகள் அல்லது செயல்பாடு/செயல்பாடுகள் உங்களை இவ்வாறு எழுதத் தூண்டியது/தூண்டின?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 15. thamizachi on February 1st, 2008 10:29 am

  நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவர்களில் நானும் அடக்கம் என்பது தெரியும். ஆனால் நீங்கள் சொல்வது போல் வாசகர்களை ஈர்ப்பதற்காகவோ, சூடான இடுகையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ
  நான் பதிவுகள் எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். யோனி என்பது ஆபாச வார்த்தையா? படைப்புகளையும், எதிர் கருத்துக்களையும் அவரவர் தனித்தன்மையை சார்ந்தது என்ற புரிதல் கூட இல்லாத போலி சமூகமா இது?

  என் எழுத்து என் உணர்வு சார்ந்த விடயம். என்னுடைய கவிதை பின் நவீனத்துவமோ, முன் நவீனத்துவமோ, மண்ணாங்கட்டியோ எனக்கு தெரியாது. ஆனால் பெண்மையின் மொழி என் கவிதை. என்னுடைய
  மொழி மரபுக்குள் கட்டுப்பட்டு இருக்காது. நிச்சயமாக இருக்காது. அது இன்னும் வீரியம் பெறும். யோனியாகவோ, எதுவாகவோ.

  “சுருங்கி விரிந்த யோனிக்குள்” என்ற ஒரு வாக்கியத்தில் சல்மாவுக்கு ஏற்பட்ட போராட்டம் எதற்காக? புதிய நோக்கை ஏற்றுக் கொள்ளாத மனோபாவமும், இந்துத்துவமும், ஆணாதிக்கமும் தான் இந்த அடக்கு முறையில் தெரிகிறது.

  தமிழ் இலக்கியச் சூழலில் பெண்ணீயத்தின் படைப்புகள் அனைத்துமே விவாதமாகிறது. ஒவ்வொரு மொழியும் அதன் படைப்புகளும் சூழல்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மை உடையவை. தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல. எந்த மொழியிலும் புதிய மாறுதலை ஏற்றுக் கொள்ளும் போது இந்த தமிழ் சமூகம் பெண்களின் உடல்மொழிசார்ந்த மொழியை பெண் படைக்கும் போது சக இலக்கிய ஆண்களாளே வேறுபடுத்தி பார்க்கப்படுவது ஏன்?

  பெண்ணீயத்தின் ஊடல் சார்ந்த படைப்புகளை ஒரு ஆண் படைப்பாளி ஆபாசமாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறான். அதை எந்த வகையில் சேர்ப்பது?

  பெண்ணீயத்தின் உணர்வு சார்ந்த விஷயங்கள் வார்த்தைகளாக உருமாற்றம் கூடாது என்பது இலக்கிய சூழலுக்கு ஆரோக்கியமானதா?

  தமிழ்மணத்தை மஞ்சள் பத்திரிக்கையாக ஆக்கிவிட்டோம் என்று கூப்பாடு போடுகிறார்களே! தமிழத்தில் கோடிக்கணக்கில் கொட்டி பலான படத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்களே அவர்களிடம் போய் இவர்கள் எதிர்ப்பை காட்டுவார்களா?

  கடைசியாக ஒன்று கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய பெரும்பான்மையான பதிவுகள் அனைத்தும் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டது தான். எந்த இடத்திலும் பேசமுடியாத கருத்துக்களை தமிழ்மணம் மூலம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வாழ்வியல் பற்றி தெரியும். காமம் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். ஆனால் வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு, அது பற்றி விவாதிக்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு தவிர்க்கப்பட கூடிய ஒன்றல்ல. பிரான்சில் 13 வயதில் செக்ஸ் கல்வி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 13 வயது பிள்ளைகளுக்கு செக்ஸ் குறித்து இருக்கும் விசாலமான பார்வை நம் ஊரில் அப்பா அம்மாவாகி விட்டவர்களிடம் கூட கிடையாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

 16. டோண்டு ராகவன் on February 1st, 2008 10:48 am

  சூடான இடுகைகள் என்பன ஆட்டமேட்டிக்காக க்ளிக்குகளின் எண்ணிக்கையை பொருத்து வருகின்றன, தமிழ்மணம் செட்டிங்ஸை வைத்துள்ளது, அவ்வளவே. என்றுதான் நான் நினைக்கிறேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 17. enRenRum anbudan BALA on February 1st, 2008 10:52 am

  நல்ல முடிவுக்கு நன்றி!

 18. Periyaarthasan on February 1st, 2008 11:47 am

  மிக நல்ல முடிவு. தமிழ்மணத்தில் ஒரு சில விளம்பரப்பிரியர்களின் அருவருப்பான எழுத்துக்கள் தமிழ்மணத்தின் நோக்கத்தையே திசைதிருப்பிக் கொண்டிருந்தது. பண்பாடுள்ள பெண் பதிவாளர்கள் தமிழ்மணப்பக்கமே காணாம்ல் போய்விட்டார்கள். கருத்துச் சுதந்திரம் என்பது மஞ்சள் பத்திரிகை, நீலப்படம் தயாரிப்பது அல்ல. உங்கள் முடிவுக்கு நன்றி.

  பெரியார்தாசன்

 19. mahi on February 1st, 2008 1:26 pm

  நல்ல முடிவு
  நன்றிகள் பல

 20. சாய் ராம் on February 1st, 2008 1:45 pm

  இணையம் என்பது கருத்துரிமைக்காக!
  அந்த கருத்து பெரும்பான்மையானாரை பாதிக்கிறது என்பது தான் ஆண்டாண்டு காலமாய் மற்ற ஊடகங்களின் justificationயாக இருந்திருக்கிறது!
  அதனை தாண்டி ஒவ்வொருக்கும் இடம் பெற்று தந்ததை தான் இணையத்தின் முக்கியமாக வலைத்தளத்தின் புரட்சி என்பதை சுட்டி காட்டுகிறேன்.
  தரத்தை உயர்த்த, நல்ல பதிப்புகளை அடையாளம் காட்ட நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டால் நன்றே!
  ஆனால் கத்திரி வேலைகள் இணைய ஊடகத்திற்கு அழகல்ல!

 21. வசந்தம்ரவி on February 1st, 2008 1:57 pm

  எல்லோருமே கடைபிடிக்க வேண்டிய முடிவு.

  நானும் இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்

 22. ரவுசு on February 1st, 2008 2:57 pm

  இந்த வரை முறை தாண்டிய பதிவுகள் பற்றி கேலி செய்து எழுதிய காரணத்தாலோ என்னவோ எம் வலைப்பதிவை தமிழ் மணம் நிர்வாகம் இன்னும் அனுமதிக்கவில்லை.

  நேரிடையாக சமூக பண்பாட்டு விழுமியங்களை கருத்தில் கொள்ளாத மனவக்கிரங்களுடன் கூடிய சில பதிவர்களின் அனைத்துக் கட்டு மீறல்களையும் அனுமதித்துக் கொள்ளும் தமிழ் மணம் எவ்வகையான அளவீட்டைக் கொண்டுள்ளது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

  ஒருசிலர் சொல்வது போல யோனியை தம் எழுத்துக்களில் எடுத்து வருவதை யாரும் தடை செய்யவில்லை என்பதையும் எல்லோரும் அறிந்த ஒரு விடயத்திற்கு வரைவ்விலக்கணம் பதியவந்த அல்லது மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை நாடும் இவ்வகையான உத்திகளையே நாம் கண்டிக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  நல்லதொரு இயங்கு களமாக தமிழ்மணம் இயங்க வேண்டுமென்பதில் எமக்கும் ஆர்வம் உண்டு.

 23. T.V.Radhakrishnan(raki) on February 1st, 2008 3:12 pm

  I welcome the decision though it was taken a little late

 24. ரவுசு on February 1st, 2008 3:22 pm

  //சுருங்கி விரிந்த யோனிக்குள்” என்ற ஒரு வாக்கியத்தில் சல்மாவுக்கு ஏற்பட்ட போராட்டம் எதற்காக? புதிய நோக்கை ஏற்றுக் கொள்ளாத மனோபாவமும், இந்துத்துவமும், ஆணாதிக்கமும் தான் இந்த அடக்கு முறையில் தெரிகிறது. //

  சுருங்கி விரியும் யோனிக்குள் என்ன வகையான உலக தத்துவத்தை அவர் காட்ட வருகின்றார் என்பதே இங்கு கேள்வியாகியதேயொழிய அவர் அச்சொல்லடுக்கைப் பாவித்ததோ அவர் ஒரு பெண் என்பதோ இங்கு விவாதமாக்கப்படவில்லை.

  //தமிழ்மணத்தை மஞ்சள் பத்திரிக்கையாக ஆக்கிவிட்டோம் என்று கூப்பாடு போடுகிறார்களே! தமிழத்தில் கோடிக்கணக்கில் கொட்டி பலான படத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்களே அவர்களிடம் போய் இவர்கள் எதிர்ப்பை காட்டுவார்களா? //

  பலான படங்களுக்கு “ஏ” சர்டிபிகேட் கொடுப்பார்கள். அது ஒரு முன்னறிவித்தல்/எச்சரிக்கை. அதன் பின் அங்கு செல்பவர்கள் யாரும் ஆட்சேபணை தெரிவிப்பதில்லை.

  ஆனால் தமிழ் மணத்தில் யோனி ஒரு சாக்குப்பை அது இதுவென்று தம் மன வக்கிரங்களை சொரிந்து கொள்பவர்கள் நல்ல வாசிப்பு அனுபவம் வேண்டி வருபவர்களை அதிர்ச்சியடைய வைக்கின்றீர்கள்.

  இப்படியான பதிவுகளையே நீங்கள் தந்து கொண்டிருப்பீர்கள் என்று பிடிவாதம் பிடித்தால் ” இது இப்படியானது விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம் “என்றூ அறிவித்து விடலாம். அதே நேரம் ஆபாசமான தலைப்புகளையும் தவிர்த்து விடலாம் அல்லது தமிழ்மண நிர்வாகம் அவற்ரை வெட்டி விடலாம்.

 25. தமிழ்மணம் on February 1st, 2008 4:08 pm

  பதிவர்களின் கருத்து வெளியீட்டுரிமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு வாசகர்களின் வாசிப்புரிமையும் முக்கியம் என தமிழ்மணம் நம்புகிறது. பதிவர்களும், வாசகர்களும் கருத்துப் பகிர்வுக்கும், கருத்து அறிதலுக்கும் தமிழ்மணத்தை பரவலாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். தமிழ்மணம் ஒரு பொதுவெளி என்ற அளவில் இவ்விரண்டுக்குமான சமநிலையைப் பேணும் வகையில் பதிவர்களும், வாசகர்களும் ஒத்துழைக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. அதற்கான விவாதம் தொடரும் வகையில் இந்த இடுகைக்கு அனுப்பப்படும் பின்னூட்டங்கள் (தனிநபர்களைத் தீவிரமாக தாக்காத வரையில்) அனுமதிக்கப்படும்.

  தமிழ்மணம் நிர்வாகம்

 26. thamizachi on February 1st, 2008 6:12 pm

  “பதிவர்களின் கருத்து வெளியீட்டுரிமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு வாசகர்களின் வாசிப்புரிமையும் முக்கியம் என தமிழ்மணம் நம்புகிறது. பதிவர்களும், வாசகர்களும் கருத்துப் பகிர்வுக்கும், கருத்து அறிதலுக்கும் தமிழ்மணத்தை பரவலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்” என்ற உங்களது வாதம் நியாயமானது.

  தவறு எங்கே இருக்கிறது என்று நீங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். பதிவர்களில் சிலர் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பதிவு போடாமல் மற்றவர்களின் பதிவுகளுக்கு வந்து அநாகரிகமான முறையில் பின்னூட்டம் இடுகிறார்கள். இப்படிபட்டவர்களை முதலில் களையெடுங்கள்.

  அரசியல் தான் சாக்கடை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் பிரான்சில் இருக்க இந்தியாவில் இருந்து ஒரு
  பதிவர் சைட் அடித்துக் கொண்டிருக்கிறது. என்னை கல்யாணம் செய்ய விரும்புகிறாராம். ஆனால் புள்ளை கொடுக்கமாட்டராம். இப்படி பேசிய பதிவர் பொறுக்கி யோக்கியமானவனாகவும் நான் யோனி பற்றி பேசியதால் தகாதவள் போலவும் பதிவு போட்டு தாக்கி எழுதுகிறது. இது தான் நம் சமூகம்.

  இந்த போலிகளை இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஜீரணித்துக் கொண்டிருப்பது?

  4 – பெண்கள் ஒரு 4- பெண்கள் போதும். உண்மையை பேசுவதற்கும், துணிந்து எழுதுவதற்கும்!

  இது போன்ற சமூகத்தில் மறைமுகமாக நடக்கும் கழிச்சடைகளையும் வெளிப்படுத்தி களை எடுத்தால் நிச்சயம் மாற்றம் வரும்.

  அதற்காக சமூகத்தில் இருந்து, மனித உணர்ச்சிகளில் இருந்து அனைத்தையும் பேச வேண்டும் விவாதிக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான சமூதாய சூழலுக்கு வழிவகுக்கும்.

  தமிழ்மணத்தின் மூலமாக அதிகளவு பகுத்தறிவு கருத்துக்களும், புதியன நோக்கிய சிந்தகைளும் உருவாகிவரும் வேளையில் ஒருசிலரின் கூப்பாடுகளுக்காக பஜனை மடமாக்கி விடாதீர்கள்.

  நன்றி.

 27. இ.கா.வள்ளி on February 1st, 2008 9:40 pm

  நல்ல முடிவு, நன்றி

 28. கானல்மனிதன் on February 1st, 2008 11:13 pm

  தோழர் தமிழச்சியின் வாதங்கள் உணார்வுபூர்வமானதாகத் தான் இருக்கிறதே தவிர வேறில்லை. அவர் இருக்கும் இடத்தின் கலாச்சாரம் வேறு. ஆனால் இன்றைய தமிழ் கலாச்சாரம் என்பது வேறு. இன்றைய சூழலில் எது படிப்பவர்களுக்கு அருவறுப்பைத் தராதோ அதை வைத்துத் தான் சொல்ல வேண்டும். அப்போது தான் அவரது கருத்துகள் சென்றடையும். தமிழச்சி ஒரு கொள்கையை பரப்ப வந்துள்ளவர். அப்படியானால் இது போன்ற இடர்பாடுகள் வரத்தான் செய்யும். பெண் “அது”, “இது” என்று பேசிக்கொண்டிருந்தால் அனைவரும் நன்றாக ஜல்லி தான் அடிப்பார்கள். ஆகவே பேச்சைக் குறைத்து பழையபடி செயல்பாட்டை அதிகமாக்குங்கள்.

 29. டோண்டு ராகவன் on February 2nd, 2008 4:08 am

  //தவறு எங்கே இருக்கிறது என்று நீங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். பதிவர்களில் சிலர் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பதிவு போடாமல் மற்றவர்களின் பதிவுகளுக்கு வந்து அநாகரிகமான முறையில் பின்னூட்டம் இடுகிறார்கள். இப்படிபட்டவர்களை முதலில் களையெடுங்கள்.//
  இதில் தமிழ்மணம் என்ன செய்ய முடியும்? பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களில் மட்டுறுத்தலை செயல்படுத்தி இம்மாதிரி பின்னூட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதுதான். அதற்காகத்தான் தமிழ்மணம் 2005 முடிவில் மட்டுறுத்தலை கட்டாயமாக்கிற்று. அதை தத்தம் வலைப்பூக்களில் செயல்படுத்தாத பதிவர்களின் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் இற்றைப்பட மாட்டா என கூறியது. இதை விட வேறு எந்த முறையிலும் சிறப்பாகச் செயல்பட முடியாது.

  அது இப்போது தேவையில்லை என விலக்கி கொண்டதுதான் தவறு என எனக்குப்படுகிறது.

  நான் எனது வலைப்பூவில் பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறேன். தொல்லையே இல்லை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 30. thamizachi on February 2nd, 2008 4:56 am

  //தோழர் தமிழச்சியின் வாதங்கள் உணார்வுபூர்வமானதாகத் தான் இருக்கிறதே தவிர வேறில்லை.//

  என்னுடைய வாதங்கள் உணர்வு பூர்வமாக இருக்கிறது என்ற உங்களது வாதம் தவறு. அறிவு பூர்வமாக இருக்கிறது என்பது தான் பொருத்தமாக இருக்கும். உணர்ச்சிகரமாக பேச ஆரம்பித்தால் மூளை தறிகெட்டு போய்விடும். நிதானம் இருக்காது. சிந்திக்கும் திறனை இழந்து உளற ஆரம்பித்துவிடும்.

  //அவர் இருக்கும் இடத்தின் கலாச்சாரம் வேறு. ஆனால் இன்றைய தமிழ் கலாச்சாரம் என்பது வேறு. இன்றைய சூழலில் எது படிப்பவர்களுக்கு அருவறுப்பைத் தராதோ அதை வைத்துத் தான் சொல்ல வேண்டும். ///

  “மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்தோள் சேயரிக்கண் வென்றி மாதர் வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ” (கம்ப இராமாயணம் 488 -3)

  “குருதாரம் பரதாரத்தைப் புணருதல்” வியாசர் – தருமருக்கு சாந்தி பர்வம் – அத்தியாயம் 83 பக்கம் 112 -113.

  இப்பபடி எவ்வளவோ இலக்கியங்களையும், பெண்ணீய வர்ணனைகளையும் பேசிய சமூகம் தானே இது. அதற்கேற்றபடி தானே நானும் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு புரியாத மொழியில் பேசினால் வேதத்தில் இருக்கும் ஆபாசங்களை ஏற்றுக் கொண்டது போல் இதையும் ஏற்றுக் கொள்வீர்களோ?

  //தமிழச்சி ஒரு கொள்கையை பரப்ப வந்துள்ளவர்.//

  நீங்களே இப்படி முடிவு செய்து கொண்டால் எப்படி? கொள்கை என்பதை விட பகுத்தறிவு பற்றி தான் நான் பேச வந்திருக்கிறேன். பெரியார் என்றால் அது பகுத்தறிவு தான் என்னைப் பொறுத்த அளவில்….

  ///பெண் “அது”, “இது” என்று பேசிக்கொண்டிருந்தால் அனைவரும் நன்றாக ஜல்லி தான் அடிப்பார்கள்.///

  ஒத்துக் கொள்கிறீர்களா ஜல்லி அடிக்கும் கூட்டம் என்று. இந்த கூட்டத்தை இப்படியே விட்டு வைக்கலாமா? அது நம் சமூகத்திற்கு நல்லதா?

 31. T.V.Radhakrishnan(raki) on February 2nd, 2008 11:48 am

  ellorum Tamizachchiyai kurai sollikkondirukkirargal.Aanal unmaiyil pinnoottam ittavargal ezhudhuvadhuthan kevalamaga irukkiradhu.Tamizachi avarukku vandha sila pinnoottangalai thavirththirundhal nanraga irundhirukkum

 32. ரவுசு on February 2nd, 2008 2:55 pm

  “மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்தோள் சேயரிக்கண் வென்றி மாதர் வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ” (கம்ப இராமாயணம் 488 -3)

  “குருதாரம் பரதாரத்தைப் புணருதல்” வியாசர் – தருமருக்கு சாந்தி பர்வம் – அத்தியாயம் 83 பக்கம் 112 -113.

  இப்பபடி எவ்வளவோ இலக்கியங்களையும், பெண்ணீய வர்ணனைகளையும் பேசிய சமூகம் தானே இது. அதற்கேற்றபடி தானே நானும் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு புரியாத மொழியில் பேசினால் வேதத்தில் இருக்கும் ஆபாசங்களை ஏற்றுக் கொண்டது போல் இதையும் ஏற்றுக் கொள்வீர்களோ?//

  இப்படி நீங்கள் பேசவில்லையே… மூத்திரம் பேய்ய ஒரு துளை.. கோணிப்பை… ஆண்குறி….

  இப்படியல்லவா ஒரு கலக்குக் கலக்கினீர்கள்.

  பெண் உரிமை , சம நீதி பற்றிப் பேசுவதற்கும் பேசப்படும் விதத்துக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய/சென்றடையக் கூடிய வழிகள் எத்தனையோ இருக்கின்றதே.. கண்ணியமான வழிகள்..

  ஒரு ஏற்றுக்கொள்ளாத இடத்திலும் கவனித்துக் கேட்க வைப்பதற்கு எத்தனை வழிகள் இருக்கின்றது… ஆனால் நீங்கள் நாடியது வெறும் பரபரப்பும் விளம்பரமும் தானே..

  பிரான்ஸில் இருந்தால் எல்லோரும் அவிழ்த்துப்போட்டா திரிகிறார்கள். பிரான்ஸ் என்று சொல்லி அப்பாவி இந்தியனை ஒன்றும் தெரியாதவன் என்று கேலி பண்ணாதீர்கள்.

  பிரான்சில் இருக்கும் 13 வயது பெண்ணுக்கு செக்ஸ் பற்றி தெரியும் என்பதால் உங்களைப்போல் கொச்சை கொச்சையாகப் பேசிக்கொண்டு திரியவில்லை. உங்களுக்காகவே சு..பு பேசுகின்ற கட்டற்ற காமக் களங்கள் இருக்கின்றன அ..அங்கு போய் நீங்கள்ளும் எழுதலாம்…பாராட்டும் பதக்கங்களும் இருக்கின்றன…

  சிறில் சொன்னார் பெரியார் கர்ப்பப்பைகளுக்கு பூட்டுப் போடும்படி ..அதையே தமிழிச்சி யோனிகளுக்குப் பூட்டுப்போடும்படி சொன்னா இதில் என்ன தப்பு என்று…அழகுக்கும் அசிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்….

  எல்லோருக்கும் தெரிந்த அழகும் அசிங்கமும் காமத்தில் தான் இருக்கின்றது. யாரும் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அது தான் பிறப்பின் சூக்குமம்.. இயற்கையின் இரகசியம்.. அதையே கொச்சைப் படுத்தி உங்கள் வக்கிர மொழியில் எழுதி விட்டு அதுவே உங்கள் புரட்சி என்று சொல்லித் திரியாதீர்கள். பெரியாரிஸ்ட் என்று சொல்கிறீர்களே..அவரின் கொள்கைகளுக்கே காமப் பூச்சு பூசிக்கொண்டிருக்கிறீர்களே..உங்களுக்குப் புரியுதா?

  சரியான புரிதல் இன்றியே நீங்கள் ஒரு விபச்சாரியின் அளவு கோல்களை அல்லது அவர்களின் பாசையை வைத்துக் கொண்டு நீங்கள் பேசுவதாவது உங்களுக்குப் புரிகின்றதா?

  //இவையெல்லாம் என்ன அந்தரத்தில் தொங்கும் ஜடங்களா? மாயத்தோற்றங்களா? உன் உடம்பில் இருக்கும் ஒரு உறுப்பை பற்றி குறிப்பிட்டு பேசுவது அநாகரிகமாகி விடுமா? ஒரு ஆணைத்திட்டும் போது கூறும் உடல்நீதியாக அவமதிப்புச் சொற்களை விட ஒரு பெண்ணை திட்டும் போது அவள் உறுப்பை கேவலப்படுத்தி பழித்துப் பேசும் வார்த்தைகள் மற்ற மொழிகளில் விட தமிழில் அதிகம் உண்டு. இவற்றையெல்லாம் எவன் உருவாக்கினான்? நாங்களா புதியதாக பெயர் வைத்துக் கொண்டு வருகிறோம்! ஏதோ பு**, கோணிப்பையாம்!//

  //நவீன பெண் என்ன கேணச்சியா?சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு …சிறுதுளை போதுமெனக்கு…பெண்ணீயம் சொல்வதாக நீபாசாங்கு செய்யாதே தோழா
  நவீன யுத்திகளையோனிக்குள் திணிப்போம்…ஆண்குறியும் ஆணுறையும்பீய்த்து நாசமாக்கி போட//

 33. கானல்மனிதன் on February 3rd, 2008 4:09 am

  //தமிழச்சி Said
  //தமிழச்சி ஒரு கொள்கையை பரப்ப வந்துள்ளவர்.//

  நீங்களே இப்படி முடிவு செய்து கொண்டால் எப்படி? கொள்கை என்பதை விட பகுத்தறிவு பற்றி தான் நான் பேச வந்திருக்கிறேன். பெரியார் என்றால் அது பகுத்தறிவு தான் என்னைப் பொறுத்த அளவில்…. ///

  இந்து மதம்,இஸ்லாம், கிறிஸ்தவ மதம் போல பெரியார் என்ற மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் அதைக் கூறினேன். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எப்படி கண்மூடித்தமாக அவர்களது மதத்தைப் பின்பற்றுகிறார்களோ அது போல தான் நீங்களும். பெரியார் எதைச் சொல்லி இருந்தாலும் அதை கண்ண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறீர்கள். இது பெரியாரது தவறு அல்ல. அவரது பெயரால் நீங்கள் செய்யும் தவறு. மனிதன் என்றால் சுயபுத்தியுடன் செயலாற்ற வேண்டும் என்றுதான் பெரியார் பாடுபட்டார். அவரது கொள்கையில் சில பிடிக்காதவை இருந்தால் அதை வெளிப்படையாகவும் சொல்லுங்கள். அதுதான் பகுத்தறிவு, இதெல்லாம் இல்லாததால் நீங்கள் பரப்புவது மதம் போன்ற கொள்கை என்று சொன்னேன்.

 34. Raghu on February 3rd, 2008 9:53 am

  தமிழச்சி, அட இதுக்கு மட்டும் ராமாயனமும், இதிகாசங்களும் புராணங்களும் உங்களுக்கு தேவையோ?? அங்கெல்லாம் அசிங்கம் இருக்கிறது என்று தானே, உங்கள் கூட்டம் அதை தூற்றிகிறது.. இப்போ உங்க வசிதிக்கு நீங்க அதை குறிப்பிட்டு சொல்றீங்க. நல்ல பெரியாரிஸ்ட்

 35. Kumar on February 3rd, 2008 11:17 am

  thoo….thoo….thoo….thamizmanam enna pannittu irukku. soththai.

Leave a Reply