தமிழ்விழி – தமிழ்மணம் விழியத்திரட்டி
தமிழ்விழி – தமிழ்மணம் விழியத்திரட்டி
டி எம் ஐ தொழில்நுட்பக்குழுவின் சிறப்பான செயற்பாட்டின் இன்னொரு பயனான தமிழ்விழி – தமிழ்மணம் விழியத்திரட்டியின் பீட்டா வடிவத்தைத் தற்பொழுது வெளியிட்டுள்ளோம்.
http://www.thamizmanam.com/video.php
தமிழ்விழிக்கான வீடியோக்கள் கூகுள் வீடியோ, யூ – டியுப், யாகூ வீடியோ போன்றவற்றின் ஓடைகளில் இருந்து திரட்டப்படுகிறது.
கூகுள் போன்றவற்றின் ஓடைகளிலிருந்து சில தேடுதல் சொற்களைக் கொண்டு இந்த விழியங்கள் திரட்டப்படுகின்றன. தமிழ்மணத்தில் சில விரும்பத்தகாத விழியங்கள் தோன்றாதவண்ணம் நிரலி ரீதியாக சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், நிரலி ரீதியாக செயற்படும் இந்தக்கட்டுப்பாடுகளை மீறி, சில விழியங்கள் தமிழ்மணத்திலே தோன்றினால் பதிவர்கள் தமிழ்மணத்திற்கு உடனே அறியத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்
தமிழ்விழி தமிழ்மணம் பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
Comments
9 Responses to “தமிழ்விழி – தமிழ்மணம் விழியத்திரட்டி”
Leave a Reply

மிக நல்ல முயற்சி.
பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Flickr, Photobucket, போன்ற நிழற்பட தளங்களில் இருந்து புகைப்படங்களையும் இவ்வாறே தொகுக்கலாம். மேலும், பல பதிவர்கள் (பரணி, ஆனந்த் போன்ற தமிழ்மணத்தில் வருபவர்களின்) பதிவுகளையும் அங்கே இணைத்துக் காட்டலாம்.
விழியத்திரட்டி சிறப்பாக இருக்கிறது.
அருமையான முயற்சி…
வாழ்த்துக்கள்.
அருமை. பாராட்டுக்கள்
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்
மேலும் ஒரு நல்ல சேவை. நன்றி.
காணக் குளிர்ச்சியாக இருக்கிறது.
பாதி பேர் பதிவுல மண்ணைப் போட்டுட்டீங்களே ஐயா!! நல்லா இருங்க!!
எல்லா புதிய முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்.
புது தமிழ்விழி, புது ‘ம’ திரட்டி, புது பூக்கூடை கலக்குது தமிழ்மணம். முயற்சிகள் செழிக்க வாழ்த்துகள்.
சிறப்பான முய்ற்சி.மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பர்கள் நன்கு பயன்படுத்தி,நல்ல முக்கிய பயனுள்ளவற்றை அனுப்பித் தமிழ்மணத்தின் தரம் மேலும் உயர்ந்திட வழி செய்ய வேண்டுகிறேன்.