தமிழ்மணம் நடத்தும் முதலாமாண்டு வலைப்பதிவர் கருத்தரங்கம்
June 5, 2007 – 11:41 pm by தமிழ்மணம்தமிழ் வலைப்பதிவர்களுக்கிடையே நேரடி அறிமுகத்தினை ஏற்படுத்தவும் , கருத்தாடல்களுக்கு வழிவகுக்கவும், புதிதாக வலைப்பதிய விரும்புபவர்களுக்கு பயிற்சியளிக்கவும் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் (Federation of Tamil Sangams of North America, FeTNA) இணைந்து பேரவையின் ஆண்டுவிழாவின்போது ஒரு வலைப்பதிவர் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்ய தமிழ்மணம் விழைகின்றது. இம்முயற்சியின் தொடக்கமாக, இவ்வாண்டு, அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாநிலத்தில் அமைந்திருக்கும் ராலே நகரில் (Raleigh, NC) ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நிகழவிருக்கும் பேரவை நிகழ்வுகளின்போது முதலாவது வலைப்பதிவர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்கிறது. இந்தக் கருத்தரங்கத்தின் உத்தேசமான வடிவம் கீழே தரப்பட்டுள்ளது :
* வலைப் பதிவர்கள், பதியாதவர்கள், பதிய விரும்புவோர், வாசிப்போர், யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம்.
* கருத்தரங்கம் சுமார் 1-2 மணி நேரங்கள் நடக்கும் .
* ஒருங்கிணைப்பாளர்/ மட்டுறுத்துனரின் அறிமுக உரை இருக்கும்.
* புதிதாக வலைப்பதிய விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் விளக்கம் இருக்கும்.
* ஒவ்வொரு வலைப்பதிவரும் தான் விரும்பும் தலைப்பில் (குறிப்பாக வலைப்பதிவு; மற்றபடி தமிழ், சமூகம் உள்ளிட்ட பல கருத்துக்களில்) உரையாற்றலாம், உரை வாசிக்கலாம், அல்லது தம் வெவ்வேறு விதமான கலைத் திறன்களை வெளிக்காட்டலாம். ஒருவருக்கு சுமார் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். வரும் வலைப்பதிவர்களின் தொகையினைப் பொறுத்து இக் கால அளவு மாறுபடும்.
* ஒவ்வொரு பதிவரின் நிகழ்ச்சிக்குப் பின்னும், அவரிடம் , பார்வையாளர்கள் பொதுவில் கேள்வி கேட்பதற்கு (அல்லது கருத்துக் கூறுவதற்கு), இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்படும் .
* அரங்கத்தில் நவீன ஒலி/ ஒளி, திரை/ projector வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே powerpointஐப் பயன்படுத்தி உரை நிகழ்த்துவது வரவேற்கப்படுகிறது .
* பேரவையின் விழாவுக்கு வருகை தரும் ஒரு சிறப்பு விருந்தினரும் நமது கருத்தரங்கில் வந்து கலந்து கொள்வார்.
இக்கருத்தரங்கை மேம்படுத்த வலைப்பதிவர்கள் தங்கள் கருத்துக்களையும் , யோசனைகளையும் கூறி நிகழ்ச்சி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அனைத்து அமெரிக்க வலைப்பதிவர்களையும் பங்குபெற அழைக்கிறோம். பங்கு பெற விரும்பும் வலைப்பதிவர்கள்/மற்றவர்கள் தங்கள் விருப்பத்தினைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைக்க கீழ்க்கண்ட வலைப்பதிவர்கள் இசைந்துள்ளார்கள். அவர்களில் யாரையேனும் பதிவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பாஸ்டன் பாலாஜி (bsubra at gmail dot com)
மயிலாடுதுறை சிவா (sivaakumar at gmail dot com)
இலவசக் கொத்தனார் (elavasam at gmail dot com)
சுந்தரவடிவேல் (sundara at gmail dot com)
சங்கரபாண்டி (sornam at gmail dot com)
19 Responses to “தமிழ்மணம் நடத்தும் முதலாமாண்டு வலைப்பதிவர் கருத்தரங்கம்”
தமிழ்மண நிர்வாகத்திற்க்கு ஒரு வேண்டுகோள்,
தமிழ் மணத்தில் ஒரு பகுதியில் கேள்வி கேட்டு யார் வேண்டும்மாணாலும் பதில் சொல்லும்
முறை (”forum”). நான் எனக்கு என்று ஒரு blog ஆரம்பித்து அதை எப்படி இனைப்பது என்று தெரியாமல்
எல்லாரிடமும் கேட்டு பிறகு “சென்ஷி” என்பவர் உதவினார், அதற்க்கு 20 நாட்களுக்கு மேல் ஆனது.
(உதவி பக்கதில் உள்ளதை போல் செய்தும் பிரச்சினை வந்தது).
forum போல் ஆரம்பிபதில் உள்ள நடைமுறை சிக்கல் எனக்கு தெரியவில்லை, வாய்ப்பு இருந்தால் ஒரு முறை
பரிசோதித்து பார்கலாமே.
By kusumban on Jun 5, 2007
நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்
By யெஸ்.பா on Jun 6, 2007
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
By லக்கிலுக் on Jun 6, 2007
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..
ஒரு மணிநேரம் என்பது மிகக் குறைவான நேரமாக தெரிந்தாலும், நல்ல தொடக்கம் தான்…
By பொன்ஸ் on Jun 6, 2007
I am sure it will be interesting. It will be nice if you can podcast the debate/discussion.
By Padma Arvind on Jun 6, 2007
வலைப்பதிவர் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேற வேண்டுமென களத்துமேடு வாழ்த்துகின்றது.
By களத்துமேடு on Jun 6, 2007
மிகவும் நல்ல முயற்சி.
வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
By துளசி கோபால் on Jun 6, 2007
/It will be nice if you can podcast the debate/discussion.//
By suratha on Jun 6, 2007
மிகவும் நல்ல முயற்சி.
வெற்றி பெற வாழ்த்துகின்றேன்
By SP.VR.SUBBIAH on Jun 6, 2007
தமிழ் மணத்தின் இன்னொரு மைல்கல்!!
வாழ்த்துக்கள்!
By லிவிங் ஸ்மைல் on Jun 6, 2007
என் பதிவுகளை ஒரு முறை படித்துவிட்டீர்களானால், அமெரிக்காவிற்கு போக-வர டிக்கெட்டும், கைச்செலவிற்குப் பணமும் கொடுத்து வர சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட கூடாது என்பதற்காக இங்கிருந்தே வாழ்த்துச் செய்தி அனுப்புகிறேன். பெற்றுக்கொண்டு கருத்தரங்க மேடையில் அறிவிக்கவும். ‘ உங்கள் முயற்சி வெற்றிபெற மனதார வாழ்த்துக்கள்’
By selventhiran on Jun 7, 2007
வாழ்த்துகள். இந்த மாதிரி ஒவ்வொரு ஊரிலும் வந்து நடத்துனீங்கன்னா நல்லா இருக்குமே
By ஜெஸிலா on Jun 7, 2007
////இந்த மாதிரி ஒவ்வொரு ஊரிலும் வந்து நடத்துனீங்கன்னா நல்லா இருக்குமே////
அதே:))
கருத்தரங்கம் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!
By selvanayaki on Jun 7, 2007
நானும் வாழ்த்துகிறேன்.. ஒரு புதிய வரலாற்றைத் துவக்கும் முதல் முயற்சியாக இது இருக்கும் என்று நம்புகிறேன்..
By உண்மைத் தமிழன் on Jun 8, 2007
கருத்தரங்கின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
By வெயிலான் on Jun 10, 2007
வாழ்த்துக்கள்….ஒவ்வொருவருக்கும் 10 நிமிடங்கள் என்பது சரிவருமா? யோசிக்கவும். முதலாமாண்டு தமிழகத்தில் நடத்தி இருந்தால் தமிழனாக பெருமைப்பட்டு இருப்பேன்.
By குறிச்சி ஜெகதீஸ் on Jun 11, 2007
நல்ல முயற்சி.
ஆனா இலங்கை
ஆட்களுக்குத்தான் ??????????
By maya on Jul 27, 2007
என் வாழ்த்துக்களும்.
By பினாத்தல் சுரேஷ் on Jul 29, 2007
இன்றைய சூழலில் தேவயான கருத்தரங்கம் தமிழர்கள் விழிப்புணர்ச்சிபெற வாய்ப்பாக அமையும் வாழ்த்துக்கள்.
By Dr.R.Gunaseelan. on Jan 3, 2009