பூக்கூடை - தமிழ்மணம் குறிச்சொல்திரட்டி
June 4, 2007 – 1:39 am by தமிழ்மணம்பூக்கூடை - தமிழ்மணம் குறிச்சொற்கள் திரட்டியின் பீட்டா வடிவத்தைத் தற்பொழுது வெளியிட்டுள்ளோம்
தமிழ்மணத்திற்கு வலைப்பதிவுகளை அனுப்பும் பொழுது, அந்த இடுகையைச் சார்ந்த ப்ளாகர் லேபிள் (Blogger Label), வேர்ட்பிரஸ் வகை (Wordpress Categories) போன்றவை பூக்கூடை திரட்டிக்கு திரட்டப்படும்.
அதிகமான இடுகைகளில் இணைக்கப்பெற்றிருக்கும் குறிச்சொற்கள் தமிழ்மணம் முன்பக்கத்தில் தெரியும். தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட அனைத்துக்குறிச்சொற்களையும் குறிச்சொற்கள் பக்கத்திற் பார்க்க முடியும் ( http://www.thamizmanam.com/tm_tags.php)
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட பதிவுகள் தவிர Wordpress, Technorati, Del.icio.us போன்றவற்றிலும் ஒரு குறிச்சொல்லைச் சார்ந்த இடுகைகளைப் பார்க்க இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
உதாரணமாக “அரசியல்” என்ற குறிச்சொல்லைச் சார்ந்து தமிழ்மணத்தில் திரட்டப்பட்ட இடுகைகளை இந்தச் சுட்டி மூலம் “http://www.thamizmanam.com/tag/அரசியல்” பார்க்க முடியும். அரசியல் என்ற குறிச்சொல் கொண்டு Wordpress, Technorati, Del.icio.us போன்றவற்றில் இணைக்கப்பட்ட பதிவுகளையும் பார்க்க இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன
வலைப்பதிவெங்கும் பூக்கும் குறிச்சொற்களைத் தமிழ்மணம் பூக்கூடை மூலமாக எளிதாகப் பார்க்க வகை செய்யும் இந்த முயற்சி வலைப்பதிவர்களுக்குப் பயனளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்
பூக்கூடை தற்பொழுது பீட்டா வடிவத்தில் இருப்பதால் உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
3 Responses to “பூக்கூடை - தமிழ்மணம் குறிச்சொல்திரட்டி”
ஆஹா.. நல்ல யோசனை.. தமிழ் வலைப்பதிவு உலகத்தின் தரம் தினம்தினம் உயர்ந்து கொண்டே செல்கிறது. அனைத்துப் பதிவுகளையும் ஒரே கருவியின் கீழ் பார்த்து சாதக, பாதகங்களை உடனுக்குடன் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.. தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..
By உண்மைத்தமிழன் on Jun 4, 2007
நல்ல முயற்சி. நான் வெகு காலமாக வேண்டியும் எதிர்ப்பார்த்தும் வந்த ஒன்றும் கூட
குறிச்சொல் பக்கங்களில் wordpress, tehcnorati இணைப்புகள் தந்திருப்பதும் நன்று. மாஹிரின் குறிச்சொல் அகராதி technorati, delicious, wordpressக்கு வெளியேயும் பதிவுகளைத் திரட்டுவதால் அதற்கான இணைப்பையும் தரலாம். ஒவ்வொரு குறிச்சொல் பக்கத்துக்கு ஒரு ஓடை வசதி தந்தால் அருமையாக இருக்கும்.
பூக்கூடை என்ற பெயர் மட்டும் தான் கொஞ்சம் இடிக்கிறது
By ரவிசங்கர் on Jun 4, 2007
ரவிசங்கர் சொன்னதுபோல் பூக்கூடை பெயர்தான் பொருந்தவில்லை.
வேறு பெயர் தேடலாம்.இல்லை போட்டி மாதிரிகூட வைக்கலாம் ஹி..ஹி..x))
By கண்மணி on Jun 4, 2007