தமிழ்மணம் “ம” திரட்டி

May 24, 2007 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணத்தின் மறுமொழிகள் திரட்டி – “ம” திரட்டி யின் ஆரம்பகட்ட அடிப்படைச்சோதனை வடிவத்தை – தற்பொழுது வெளியிட்டுள்ளோம். பதிவுகளின் திரட்டி போல அல்லாது மறுமொழிகளின் திரட்டி தமிழ்மணம் வழங்கிக்கு அதிகப் பளுவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதுகிறோம். எனவே “ம” திரட்டியின் செயற்பாட்டிலே வேண்டிய முன்னேற்றம் (Performance improvement), தொழில்நுட்பத்தேவைகள், வாய்ப்புகள் மற்றும் இது குறித்த பதிவர்களின் கருத்துக்கள் போன்றவற்றை அலசுவதற்கு இச்சோதனை வடிவத்தைப் பயன்படுத்திக்கொள்ள இருக்கிறோம்.

தற்போதைய நிலையில் இந்த திரட்டியில் சில பதிவுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன; பல பதிவுகளைச் சேர்க்கவில்லை. “ம” திரட்டியில் பதிவுகளைச் சேர்ப்பதற்கு எந்த அளவுகோலும் வைக்கவில்லை. பரிசோதனைக்காகச் சில பதிவுகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன.

“ம” திரட்டிக்கு மறுமொழிகள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை திரட்டப்படுகிறது

“ம” திரட்டியின் மூலமாக தமிழ்மணம் மறுமொழிகளைப் புதிய வடிவத்தில், பதிவர்களையும்/வாசகர்களையும் ஈர்க்கும் வடிவத்தில் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்த ஆலோசனைகளைப் பதிவர்கள் எங்களுக்கு இந்தப் பதிவின் பின்னூட்டம் மூலமாகவோ, மின்னஞ்சல் ( admin@thamizmanam.com) மூலமாகவோ அனுப்பலாம்.

பதிவுகளின் ஓடையை (OPML) வழங்கிய தமிழ்மணம் நண்பர் சுரதாவிற்கு எங்கள் நன்றி

“ம” திரட்டி உங்களுக்கு ஒரு புதிய வலைப்பதிவு அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறோம்.

Comments

10 Responses to “தமிழ்மணம் “ம” திரட்டி”

  1. Bala Subra on May 24th, 2007 8:27 am

    அருமை… வாழ்த்துகள் + நன்றி!

  2. prakash on May 24th, 2007 8:37 am

    சூப்பர்ர்ர்ர்ர்.. இதை விட பரண் சூப்பரப்பூ.. கிட்டதட்ட ரெண்டு மணிநேரம் அதிலேயே மூழ்கிட்டேன்.

    தமிழ்மணத்திலே புதுசா யாராச்சும் சீஈஓ வா சேர்ந்திருக்காங்களா என்ன? சமீபகாலமா இவ்ளோ கலக்கலா இருக்கு?

    அமோகமான வாழ்த்துக்கள்

  3. மஞ்சூர் ராசா on May 26th, 2007 3:47 am

    என் பதிவில் மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து கவனியுங்கள்.
    நன்றி.

  4. Anonymous on June 3rd, 2007 11:18 am

    //கோஷாவுக்குள் ஒளிந்து கொள்பவர்களோடு பேசுவதில் எனக்கு மனமில்லை. ஆனால், தமிழ் மணம் என்று ஒரு மேடை இருக்கிறதே -internet-ல்?, தீந்தமிழ் நாட்டின் அரசியல் பேச்சாளர்கள், வாய் திறந்தால் கொட்டுமே, அந்த ரகமாக இருக்கிறது பிறைநதிப்புறத்தானின் எழுத்து. மறுபடியும் இந்த ரக எழுத்து படையெடுக்கலாம் தான். இந்த ஒரு முறையோடு சரி. உண்மையும் நாகரீகமும் நல்ல ஹிருதயமும் உள்ளவர்கள் பேசட்டும்.//

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=80705311&format=html

    வெங்கட் சாமிநாதன் தமிழ் மணம் என்பது தமிழ்மணம் என்னும் வலைத்திரட்டியையா அல்லது பொதுவாகத் தமிழ் இணையச் சமுதாயத்தைப் பற்றிச் சொல்கிறாரா? உங்களுக்குத் தெரிந்தால் விளக்குங்களேன். வலைத்திரட்டியைப் பற்றிச் சொல்கிறார் எனில், வெங்கட் சாமிநாதன் என்ற இலக்கியவாதியும் இணையச் சில்லறை அரசியல்வாதிகள் போதனையைக் கேட்டுக்கொண்டு உளறுபவர் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். பாசிசம் அது இதென்று என்ற ரீதியில் தமிழ்மணத்தின் மீது வீசப்பட்ட அவதூறுகள் அனைத்தையும் வலைப்பதிவுகளில் படித்திருக்குமளவு வெங்கட் சாமிநாதனுக்கு நேரம் இருந்திருக்குமென்று தோன்றவில்லை. அது அனைத்தையும் செலக்டிவாக வடிகட்டித் திரட்டி, சேர்ந்து டீ குடிக்கப் போனபோது தமிழ்மணமோ தேன்கூடோ தமிழ்வெளியோ ஒரு பாசிசத் திரட்டி பருப்பு ரச விரட்டி என்று மச்சான் சொன்னான் மாப்பிள்ளை சொன்னான் என்று இப்படிப் பொத்தாம்பொதுவாக சொல்கிறாரா தெரியவில்லை. இன்றைக்கு ஒரு வலைத்திரட்டிக்குக் குறி வைத்தால் நாளைக்கு தன் கருத்துடன் ஒத்துப்போக மறுக்கும் எந்தவொரு வலைத்திரட்டிக்கும் இதே கதி தான். ஒருவேளை அனைவரும் கோஷாவுக்குள் ஒளிந்துகொண்டே இருந்தால்தான் வெங்கட் சாமிநாதனுக்கும் பேசுவதற்கும் ஏதாவது இருக்குமோ என்னவோ? அவர் கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்றபோதிலும், விளக்கமாகத் தெரிந்துகொண்டால் இன்னும் தெளிவாக இருக்கும்.

  5. ரவிசங்கர் on June 4th, 2007 9:48 am

    //“ம” திரட்டியின் மூலமாக தமிழ்மணம் மறுமொழிகளைப் புதிய வடிவத்தில், பதிவர்களையும்/வாசகர்களையும் ஈர்க்கும் வடிவத்தில் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.//

    மறுமொழித் திரட்டை விட இந்த வடிவமைப்பை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். தமிழ்மணத்தில் நுட்ப மேம்பாடுகள் வெகு காலமாக இல்லை என்று விமர்சனம் எழுந்தாலும் எழுந்தது..இப்ப கடந்த ஒரு மாதமாக புதுப் புது யோசனைகள், நுட்பங்கள் என்று போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்..மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்..TMIL நிறுவனமயபடுத்தப்பட்டிருப்பதால் தொழில்முறை நிரலாளர் உதவியைக் கூட நாடினால் மாற்றங்களை உடனுக்குடன் செயல்படுத்தலாம். ஆனால், அவர்களை பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ பணியில் அமர்த்தி சம்பாதிப்பதற்கான வருவாய் ஈட்டல் திட்டம் குறித்து சிந்திக்க வேண்டும்.

  6. ரவிசங்கர் on August 22nd, 2007 6:36 pm

    மறுமொழித் திரட்டியில் ஒரு இடத்தில் நம் மறுமொழிகள் அனைத்தையும் பார்க்கும் வசதி அருமை ! எளிதாக இடுகைகளைச் சென்றடையவும் முடியும். நமக்கு யாரும் போலி இருக்கிறார்களா என்றும் பார்க்க முடியும் :) wordpressல் dashboardல் இந்த வசதி உண்டு. ப்ளாகர் தரும் என்று எதிர்ப்பார்த்திருந்தேன். ஆனால், தமிழ்மணத்திடம் இருந்து எதிர்ப்பார்த்திருக்கவில்லை :) அப்படியே wordpress மறுமொழிகளையும் நீங்கள் திரட்ட வழி செய்தால் முத்தாய்ப்பாக இருக்கும்

  7. புரட்சி தமிழன் on December 15th, 2007 6:33 am

    மதிப்பிர்க்குறிய தமிழ் மணம் நிர்வாகி அவர்களுக்கு என் பதிவில் மருமொழி மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து கவனியுங்கள் ஐய்யா.
    நன்றி.

  8. Cheena (சீனா) on December 15th, 2007 6:46 am

    என்னுடைய மூன்று பதிவுகளுமே – மறுமொழி மட்டுறுத்தலுடையது. ஆயினும் மறுமொழிகள் திரட்டப்படுவதில்லை. கவனிக்க முடியுமா

  9. செல்லி on December 15th, 2007 7:58 am

    வாழ்த்துக்கள்!
    மேலும், எனது “அடுப்படி ” பதிவில் மறுமொழி மட்டுப்படுத்தல் செய்யப்படவில்லை. தயவு செய்து ஒருமுறை கவனிக்கவும்.
    நன்றி

  10. எம்.ரிஷான் ஷெரீப் on December 22nd, 2007 2:16 am

    http://mrishanshareef.blogspot.com/

    இவ்வலைப்பதிவில் மறுமொழி மட்டறுத்தல் செய்துள்ளேன்.எனினும் மறுமொழி மட்டறுக்கப்படவில்லை எனத் தகவல் வருகின்றது.
    கொஞ்சம் உதவுங்கள் நண்பரே…!
    நன்றிகள்.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

Leave a Reply